பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

159

இப் பகுதியில் மட்டும் பதினைந்தாயிரம் தொழி

லாளிகள், இவ்வேலைகளில் ஈடுபட்டுள்ளார்கள்.

பொறுப்பாளர் ஏறத்தாழ இரண்டு மணிநேரம் எங்களுக்கு பொறிகளைக் காட்டினர். அருகிலிருந்த மருத்துவமனையையும் காட்டினர். அவர் மனக் திறந்து பேசியதால், உரிமையோடு சில கேள்விகளைக் கேட்டோம். அவர் கொடுத்த பதில்களிலிருந்து தெரிந்து கொண்டவை

வருமாறு :

எண்ணெய் ஆலையின் தலைமை அதிகாரி அல்ல அவர் அவர், நடுத்தர அதிகாரி. அவரது சம்பளம் மாதம் முந்நூற்று அறுபது ரூபிள்கள். அதில், நாற்றுக்குப் பத்து, வரியாகக் கொடுக்கவேண்டும். அவருக்கென்று தனியாக, வங்கியில் கணக்கு இருக்கிறது. அந்தக் கணக்குப் புத்தகத்தை எங்களிடம் கொடுத்தார். பார்க்கச் சொன்னர். ஆயிரத்து எண்ணுாறு ரூபிள்கள் கணக்கில் இருந்தன. தன் மனைவிக்கு, தனிக் கணக்கு உண்டென்ருர், அதில், அதிகத் தொகை நிலுவை இருப்பதாகக் கூறினர். ஏன் என்று விளக்கம் கேட்டேன். அவர், சிகரெட் குடிப்பதால் பணம் கரைந்து போவதாகவும், மனேவிக்கு அந்தப் பழக்கம் இல்லாமையால் அதிகம் மிச்சமாவ தாகவும் கூறினர்.

பணத்தை மிச்சப்படுத்தி என்ன செய்யப் போகி lர்கள் என்று கேட்டோம். தான் வைத்துள்ள கார் பழையதாகிவிடும். அதற்குப் பதில் புதிய கார் வாங்கு வதற்கு, சேமிப்பு உதவுமென்ருர்.

நல்ல, பெரிய, காரின் விலை எவ்வளவு? மூவாயிரத்து ஐந்நூறு ரூபிள்கள். அதாவது, அந்த நடுத்தர அதிகாரியின் பத்து மாதச் சம்பளத்தைச் சேர்த்தால் பெரிய நல்ல கார் வாங்க முடியும் என்பதைத் தெரிந்துகொண்டோம்.