பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25

சிந்திக்கச்செய்ய, முன்னர், உலக அமைப்பு ஒன்று இல்லை. ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஏற் பட்ட 'யூனெஸ்கோ அந் நற்பணியைச் செய்து வருகிறது. உலகில் எல்லோரையும் எழுத்தறிவுடையவர்களாக்கும் பணியில் அகற்குப் போதிய ஆதரவு கிடைக்கா விட்டாலும், இப்படிப்பட்ட சிக்கல்கள் இருப்பதை விளம் பரப்படுத்துவதில் யூனெஸ்கோ வெற்றி பெற்றுள்ளது.

புராதன நாகரீகச் சின்னங்களைக் காப்பதிலும் விஞ்ஞான வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும், இன வேற்று மைக் கொடுமையைப் படம் பிடித்துக் காட்டுவதிலும் பூனெஸ்கோ ஒரளவு வெற்றி பெற்றுள்ளது.

'யூனிசெப்' என்பது, உலகக் குழந்தைகள் அனை வருடைய நல்வாழ்வைக் கவனித்துக் கொள்ள, ஏற்படுத் தப்பட்ட அம்ைப்பாகும். அது தோன்றுவதற்கு முன்பு, கோடிக்கணக்கான குழந்தைகள் உண்ண உணவின்றி பரிதவிப்பதையும் கிடைக்கும் உணவு சத்தின்றி இருப் பதையும் அதனுல் இளேப்பு, களேப்பு, வளர்ச்சியின்மை, நோய் கொடிகளுக்கு ஆளாகுதல் ஆகியவை பற்றியும் மானுடத்தின் கவனம் பெருமளவு ஈர்க்கப்படவில்லை.

'யூனிசெப் யூனெஸ்கோ ஆகிய உலக அவைகள் இந்தியாவில் சில திட்டங்களுக்கு, அப்போதைக்கப்போது உதவிபுரிகின்றன.

"ஆமாம், அந்த கருத்தரங்கிற்கு எட்டபுரம் டாலர் தந்ததே யூனெஸ்கோ! பச்சைக் குழந்தைகளுக்குப் பால் வார்க்க, யூனிசெப் கொடுத்ததே இலட்ச ரூபாய்! அந்தக் கோயில் திருப்பணிக்கு பதினையாயிரம் டாலர்" என்று மகிழ்கிருேம். சிறுபிள்ளைகள், எதிர்பாராத, மிட்டாய்ப் பரிசுகளுக்கு மகிழ்ந்து கூத்தாடுவதுபோல நாமும், போற்றிப் புகழ்ந்து, யூனிசெப் யூனெஸ்கோ போன்ற

சேர-2