பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

கானவர்கள் உறுப்பினர்கள். டாஷ்கண்ட் கிளேயில் முழு நேர ஊழியராக இருப்பவர் எங்களை அழைத்துச் செல்ல வந்த ஆங்கில மொழி பெயர்ப்பாளர். அவரோடு வந்த, மற்றவர், பேராசிரியர் ஆவார். டாஷ்கண்ட் உயர்மட்ட கல்வி நிலையத்தில், கீழ்த் திசைக் கல்விப் பிரிவில், கலைப் பேராசிரியர். அவர், மேற்கூறிய கட்புறவுக் கழகத்தின் டாஷ்கண்ட் கிளையின் துணைத் தலைவர். அப் பேராசிரியர் நன்ருக பெர்சிய மொழியும் உருது மொழியும் பேசினர். இவ்விரண்டு மொழிகளும் எனக்குத் தெரியாது. எங்கள்

குழுவைச் சேர்ந்த திரு. கானுக்குத் தெரியும்.

டாஷ்கண்ட் நகரம் உஸ்பெக்கிஸ்தான் குடியாசின் தலைநகரம். உஸ்பெக்கிஸ்தான், சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த பதினைந்து குடியரசுகளில் ஒன்று. இது, ஜார் அரசரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்து, பின்னர் சோவியத் ஆட்சிக்கு வந்தது. ஆனல் இது தொன்று தொட்டு, ஜார் அரசருடையது அல்ல. -

உஸ்பெக் வரலாற்றை சிறிது கவனிப்போம். உஸ்பெக்கிஸ்தான் பழம்பெரும் பூமி. இது மத்திய ஆசியாவைச் சேர்ந்தது. தொன்மை வாய்ந்த நாகரீகங் களும் பழமையான பண்பாடுகளும் பிறந்த பகுதி இது என்கிருர்கள், வல்லுனர்கள். தொல்பொருள் ஆராய்ச்சி யாளர் இலட்சம் ஆண்டுகளுக்கு முந்திய மனிதர்களின் பாசறையை சமார்கண்டிற்கு அருகில் கண்டுபிடித்ததாகத் தகவல். சமார்கண்ட் உஸ்பெக்கிஸ்தானின் பெருநகரங் களில் ஒன்று.

கிறிஸ்து பிறப்பதற்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, நூறு பேர் வாழக் கூடிய பெரிய வீடுகளை, இப் பகுதி மக்கள் கட்டி வாழ்ந்ததாகத் தெரிகிறது. மண் பாண்டக் கலையையும் அவர்கள் கையாண்டார்கள்.கி. மு.