பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்தாரும் ஆண்டு ஏப்ரல் இருபத்தி ஆரும் நாள் ஏற்பட்ட டாஷ் கண்ட் கில அதிர்ச்சியைப் பற்றி முதலில் கேட்டேன். அது, டாஷ்கண்ட் ஒட்டலைப் பாதிக்காததைப் பற்றி மகிழ்ச்சி தெரிவித்தேன். -

நில அதிர்ச்சி கடுமையாக இருந்ததாம். ஆயினும் அந்த ஒட்டல் போன்ற பெருங் கட்டடங்களில் சொற்ப சேதமே. எண்ணற்ற சாதாரணக் கட்டடங்களும் வீடுகளும் வீழ்ந்து விட்டனவாம். பாதிக்கப்பட்டோர் இலட்சக்கணக்கில் என்று கூறிய போது வருந்தினுேம். எழுபத்தையாயிரம் குடும்பங்கள் ஒரே காளில் வீடிழந்து தெருவில் கின்றன. பன்னிரண்டு இலட்சம் மக்களுடைய அங் நகரத்தில் மூன்று நான்கு இலட்சம் பேர்களுக்கு, திடீரென, இருக்க இடமில்லை யென்னும் கிலே எவ்வளவு வேதனையான நிலை. -

கூடாரங்கள் அடித்து, இலட்சக் கணக்கானவர். களுக்கு உறையுள் ஏற்படுத்திக் கொடுத்தார்கள் என்று எடுத்துரைத்தார் தோழர். இயற்கை ஒரு முறை சீறிய தோடு கின்றதா? இல்லை. அவ்வாண்டில் எழுநூறு முறை, நிலம் அதிர்ந்தது. ஆயினும் அஞ்சித் தவிக்க வில்லை. டாஷ்கண்ட் மக்கள். எதையும் தாங்கும் இதயங் கொண்டு தங்கள் தங்கள் பணிகளில் என்றும் போல் ஈடுபட்டிருந்தார்கள், என்று பெருமிதத்தோடு கூறினர்.

"எல்லோர்க்குமாக எல்லோரும்' - இதுவே புதிய சமுதாயத்தின் கொள்கை. டாஷ்கண்ட் மக்களின் இழப் பையும் இன்னல்களையும் கேட்டவுடனே, சோவியத் நாடு முழுவதும் அவர்களுக்கு உதவிபுரிய முன் வந்தது.

ஏற்பட்ட சேதத்தையும் தேவைப்படும் உதவி யையும் கணக்கிட்டு அறிவித்தார்கள். சேதத்தைச் சரி