பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

பார்க்கவேண்டும். இப்பகுதியின் கட்டடக் கலைக்கு அவை எடுத்துக் காட்டுக்கள். அங்கே .ெ ச ல் வ ைத யு ம் சுற்றுலாவில் சேர்த்து விடட்டுமா?" என்று கேட்டார் மொழிபெயர்ப்பாளரும் வழிகாட்டியுமான தோழர்.

சாமர்கண்டிற்கும் இந்தியாவிற்கும் வரலாற்றுத் தொடர்புண்டு. அங்கிருந்து வந்த, பாபர். இந்தியாவில் மொகலாயப் பேரரசை அமைத்தார். எங்கள் பேரரசரின் பூர்விக பூமியைக் காண விருப்பமே. முடிந்தால் அங்கும் போய் வரலாம்" என்று பதில் அளித்தோம்.

"பாபர் காலத்தில் சாமர்கண்ட் உஸ்பெக்கிஸ் தானத்தைச் சேர்ந்ததல்ல. அப்போது அது தனி அரசு. ஆகவே இந்தியாவின்மேல் படையெடுத்தவர்கள் எங்கள் முன்னேர் என்று கருதிவிடவேண்டாம். சோவியத் உஜ்பெக் மக்களுக்கு படையெடுப்பு அவா கிடையாது” என்று தெளிவுபடுத்தினர், அந் நாட்டுப் பேராசிரியர். இதுவே தெளிவான கண்ணுேட்டம். வரலாற்றுப் பாடம் வம்பை வளர்க்கும் பாடமாகாதிருக்க, இத்தகைய கண்ணுேட்டம் தேவை என்பதை உணர்ந்தோம்.

விரைந்து ஒடிக்கொண்டிருந்த கார், சட்டென்று கின்றது. -

'மழை துாறிக் கொண்டிருக்கிறது. அதை பொருட் படுத்தாமல் கீழே இறங்கி வரமுடியுமா? இதோ தெரிவது இக் குடியரசின் இலக்கியப் பொருட்காட்சி. இதைப் பற்றி நாங்கள் அதிகம் பெருமைப்படுகிருேம். உள்ளே சென்று பார்ப்பதற்கு அகாலமாகிவிட்டது. ஆயினும் சில கிமிடங்கள் வெளியே இருந்து பார்க்கலாமே!" என்று யோசனை கூறினர்கள் உள்ளுர்க்காரர்கள்.

துறலுக்குத் துணிந்து இறங்கினுேம்,