பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67

காங்கள், விரைந்து ஆயத்தமானேம். எவ்வளவு விரைந்தும், புறப்பட ஆறேகால் மணியாகி விட்டது. எங்கள் நெஞ்சம் குறுகுறுத்தது. மன்னிப்புக் கோர முேயன்ருேம். அதற்கு விடவில்லை அவர்.

"ஒட்டலில் இவ்வளவு அதிகாலையில் சிற்றுண்டி கிடைக்காது. எனவே விமான கிலேய சிற்றுண்டி சாலையில் உண்ண வேண்டும். அதற்குப் போதிய காலம் விடுவதற். காகவே இவ்வளவு சீக்கிரம் புறப்படக் கோரினேன். இங்கு சிறிது தாமதமாகி விட்டதால், அங்கு விரைந்து உண்ண வேண்டும். அதைத் தவிர வேறு இடையூறு இல்லே' என்று எங்களே அமைதிப் படுத்தினர் அவர்.

ஒட்டல் பணியகத்தில் காங்கள் பாஸ்போர்ட்டுகளைக் கொடுத்திருந்தோம். அவற்றை, அவர் வாங்கி வைத்தி ருந்தார். ஒவ்வொன்றையும் உரியவர்களிடம் கொடுத்தார்.

அதிகாலையானதால், போக்குவரத்து நெரிசல் இல்லை.

கார் சிட்டெனப் பறந்தது. விரைவில் விமான கிலேயத்

தைச் சேர்ந்தோம். எங்கள் பெட்டிகளையும் பயணச் சீட்டுகளையும் இன்டுரிஸ்ட் அலுவலரிடம் ஒப்படைத்தார்.

இன்டுரிஸ்ட் நிறுவனம் சோவியத் நாட்டின் சுற்றுலா அமைப்பு. பயணிகளின் சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்யும் அமைப்பு அது. அந்த அமைப்பு, பல ஊர்களில் ஒட்டல் களே நடத்துகிறது. விமானம், இரயில் ஆகியவற்றில் பயணஞ் செய்யச் சீட்டுகள் வாங்கித் தருவது, தங்குமிடம் ஏற்பாடு செய்வது, நாடகம், கூத்து, இசைக் கச்சேரி களுக்கு நுழைவுச் சீட்டு பெற்றுத் தருதல், பார்க்கத் தகுந்த சிறப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்று காட்டுதல், ஆகிய பல பணிகளையும் மேற்கொள்ளும்

இன்டுரிஸ்ட்.