பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

இடங்கள். இது, குடியரசுகளுக்கிடையே சமத்துவம். நிலவத் துணைபுரிகிறது.

o

சோவியத் ஒன்றியத்தின் நாடாளுமன்றம், சாதாரண மாக ஆண்டுக்கு இரு முறை கூடும். நாடாளு மன்றத்தின் இரு அவைகளும் ஒன்ருகக் கூடியே அமைச்சரவையை ஏற்கும். இதுவும் தேசிய இனங்களுக்குப் பாதுகாப்பு.

இது போக, நாடாளுமன்றம் கூடாத இடை வேளையில் நாட்டு நடவடிக்கைகளைக் கவனிக்கவும், அமைச்சரவையை மேற்பார்க்கவும் பிரிசிடியம் தலைமைக் குழு' என்ற குழு உண்டு. அக் குழுவில் முப்பத்தேழு உறுப்பினர்கள் இருப்பார்கள். ஒருவர் தலைவர் ; ஒருவர் செயலர் ; பதினைந்து குடியரசுகளின் பிரிசீடிய'த் தலைவர்கள் இதில் உறுப்பினர்கள். மேலும் இருபது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதில் இருப்பார்கள். இதுவும் செல்வாக்கைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

மேலும் சோவியத் ஒன்றிய அமைச்சரவையில், ஒவ்வொரு குடியரசின் தலைமை அமைச்சரும் உறுப்பின. ராவார். இவர்கள் தவிர வேறு அமைச்சர்களும் இருப்பார்கள். எனினும் ஒவ்வொரு குடியரசின் தலைமை அமைச்சரும், நாடு முழுவதற்குமான அமைச்சரவையில் இருப்பதன் மூலம், தனியொரு குடியரசின் செல்வாக்கு அதிகரித்து விடாதபடி கட்டுப்படுத்தப் படுகிறது.

சோவியத் நாட்டின் பரப்பு எவ்வளவோ?

இரண்டு கோடி, இருபத்தி நான்கு இலட்சம் சதுர கிலோ மீட்டர் இந் நாட்டின் பரப்பு. சோவியத் காட்டின் கீழ் கோடியிலிருந்து மேற்குக் கோடிக்கு பத்தாயிரம் கிலோ மீட்டர்கள் என்று சென்ற முறை தெரிந்து கொண்டேன். வடக்கு தெற்காக அதன் தூரம் ஐயாயிரம் கிலோமீட்டர்களாம். உலகில் மிகப் பெரிய நாடு இதுவிே