பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

சமய உரிமையும் வழிபாட்டு உரிமையும் சோவியத் நாட்டில் உண்டா? உண்டு. சமய நம்பிக்கை தனி நபருடைய மனச் சாட்சியைப் பொறுத்தது. " .

ஜார் கிறிஸ்தவ அரசர். அவரது ஆட்சி கிறிஸ்தவ ஆட்சி. அக்டோபர் புரட்சிக்குப் பின் ஏற்பட்டுள்ள இன்றைய சோவியத் ஆட்சி, சமயத்திற்கும் ஆட்சிக்கும் தொடர்பில்லாமல் செய்து விட்டது. அதாவது, ஆட்சி யால் ஆதரிக்கப்படும் சமயம் என்று ஒன்று இல்லே. சமயச் சார்பற்ற சோவியத் ஆட்சியில் கிறிஸ்தவர்கள், இஸ்லா மியர்கள், பெளத்தர்கள் உள்ளார்கள். அந்தந்த சமயத் தைச் சேர்ந்தவர்கள் அவர்கள் அவர்கள் முறைப்படி வழிபாடு செய்ய உரிமை பெற்றிருக்கிருர்கள். வழிபாட்டு உரிமையைப் பறிக்கவில்ல்ை. கிறிஸ்தவர்களுக்குள்ளே இரண்டு மூன்று பிரிவுகள் உண்டாம். ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொரு தலைவரும் கூட்டமைப்பும் உண்டு. இஸ்லாமியருக்கும், வெவ்வேறு பக்கங்களில், வெவ்வேறு அமைப்புகளும், அவற்றின் தலைவர்களும் உண்டாம்.

சமயவாதிகளுக்கு உரிமை இருப்பது போலவே, சமய, கம்பிக்கை இல்லாதவர்களுக்கும் முழு உரிமையுண்டு. சமய நம்பிக்கையுடையவராக இருக்கவேண்டுமென்று யாரையும் கட்டாயப்படுத்த முடியாது.

அதை நேரில் காண, நேரம் வந்துவிட்டது, என்று சொல்லாமல் சொல்லுவ்து போல், "மாஸ்கோ விமான நிலையத்தில் இறங்கப் போகிருேம். கச்சையைக் கட்டிக் கொள்ளுங்கள், புகை பிடிக்காதீர்கள் என்று அறிவிப்பு கேட்டது. s

மாஸ்கோவிற்கு வந்து விட்டோம். சிறிது நேரத்தில் அம் மண்ணில் கால். எடுத்து வைக்கப் போகிருேம் என்ற மகிழ்ச்சியில் ஆழ்ந்தோம். கைகள் கச்சையைக் கட்டின.