பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

'காள்தோறும் ஏராளமான பயணிகள் மாஸ்கோ விற்கு, வந்து போவதை இது காட்டுகிறது” இது என் நண்பரின் மதிப்பீடு.

"ஆம். நாள்தோறும் பத்து இலட்சம் மக்கள் விமானம், இரயில், கப்பல், நெடுஞ்சாலை ஆகிய வழிகளில் மாஸ்கோவிற்கு வந்து போவதாக, புள்ளிவிவரிகள் கூறு கிருர்கள்."

இப் பதிலைக் கேட்டதும்,

'இத்தனை இலட்சம் பேருக்குத் தங்குமிடம் ஏற்பாடு செய்வது பெரும்பாடாக இருக்குமே" என்ருர் மற்ருெரு: இந்தியர். o

'பயணிகளுக்கு வசதி செய்ய, பெரும் முயற்சி தேவை. இரஷ்யக் குடிமக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுப் பதற்கு சோவியத் ஆட்சி பெரு முயற்சி எடுக்கிறது. விருந்தாளிகளின் பெருக்கத்தைச் சமாளிப்பதற்காக, புதுப் புது ஒட்டல்களேக் கட்டுவதிலும் அக்கறை கொண் டுள்ளது எங்கள் அரசு' என்ருர். -

"வீடுகள் என்ருேமே 1 இதோ வ ல ப் பு ற ம் பாருங்கள். பல மாடிக் கட்டடங்கள். ஒன்ரு? இரண்டா? பலவற்றைக் காண்பீர்கள். அனைத்தும் அண்மையில் கட்டி முடிக்கப்பட்டவை. இப் பகுதி வாழ் மக்களுக்கு வேண்டிய க ைட க ள் இவ் வளைவுக்குள்ளேயே. சிற்றுண்டிச் சாலைகளுக்கும் வெளியே போக வேண்டாம். கிழற்படக் காட்சிகளையும் இங்கேயே காணலாம். பள்ளி, பூங்கா, கலையரங்கம் ஆகியவை, புதிய குடியிருப்புப் பகுதிகளில் உண்டு. இப்படித் தன்னிறைவு பெற்ற குடியிருப்புப் பகுதிகள் பல, ஒவ்வோர் ஆண்டும் மாஸ், கோவில் உருவாகின்றன. முன்பிருந்த, சிறு மர வீடு, களுக்குப் பதில், மாடி வீடுகள் கட்டப்பட்டிருப்பதை.