பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145

ஐம்பத்தி ஐந்தாம் அத்தியாயம் தனி நபர் சத்தியாகிரகம்

ஆங்கிலேயரின் போக்கு இ ந் தி ய மக்களுக்குப் பிடிக்காவிட்டாலும், மனித வர்க்கத்தின் சுதந்திரத்தை அழிக்கும் போரை ஆதரிக்கவில்லை. என்றாலும் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு, சுதந்திரம் பெற முயற்சி செய்தது காங்கிரஸ்.

காந்தியடிகள் ஏற்கெனவே அரசியலிலிருந்து ஒதுங்கி விட்டார். அன்றைய நடப்புகளை கவனித்தது காங்கிரஸ் காரியக் கமிட்டி.

காரிய கமிட்டி ஒரு சப் கமிட்டியை நியமித்தது. அதில் நேரு, அசாத், படேல் அங்கத்தினர்.

1940ஆம் ஆண்டில் காங்கிரஸ் லின்லித்கோவுடன் சமரசம் பேச ஒப்புக்கொண்டது. அதன்படி வைசிராயும் செப்டம்பர் மாதம் "மனம் விட்டு பேசி முடிவு செய்ய’ நேருவையும், காந்தியையும் மற்ற தலைவர்களையும் அழைத்தது,

நேருவின் வேகம் லின்லித்கோவை தடுமாற செய்தது.

ஜின்னா - இந்திய நாடு வேறு: முஸ்லிம்களின் பகுதி இந்தியாவின் மூன்றில் ஒரு பங்கு: அதுவே பாகிஸ்தான்.

இந்தியா ஒரு முழுைைமயான தனி நாடு அல்ல என்று முட்டுக்கட்டை போட்டார்.

பிறகு என்ன ? பேச்சு முறிந்தது.

18