பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

151

151

அரசியல் நிர்ணய சபை ஏற்படுத்தப்பட்டது. ஏன் ? இந்தியாவுக்கேற்ற அரசியல் திட்டத்தை அமைக்க.

1947 மார்ச்சு 23-ந் தேதி டில்லியில் கூடிய ஆசிய மகாநாட்டைத் துவக்கி வைத்தார் ஆசிய ஜோதி.

கடைசியில் 1947-ஆம் ஆண்டு ஆகஸ்டு பதினைந்தாம் தேதி பாரதத் தாய் சுமார் இருநூறு ஆண்டுகளுக்குப் பின், சுதந்திரம் பெற்றாள்.

சுதந்திர இந்தியாவின் தலைமகன் நேரு, முதல் பிரதமர் ஆனார். அவருக்கு அப்போது வயது 58. தாம் இடைவிடாது போராடிய தர்ம போராட்டம் வெற்றி பெற்றதைக் கண்டு மகிழ்ந்தார்.

டெல்லியிலே நம் நாட்டு கொடி பறப்பதைக் கண்டு ஆனந்தப்பட்டார்.

போராட்ட வீரர், இந்த தர்ம போரில் உயிரிழந்த போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

வாழ்க பாரதம் !

வாழ்க நேரு 1” என்ற மகிழ்ச்சிக்குரல் விண்ணையே தொட்டது.

ဒွိင္ငံ

நேருவின் அரிய கருத்துக்கள்

  • ஏகபோகங்கள் சோஷலிசத்தின் எதிரிகள்