பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

பத்தாம் அத்தியாயம்

ஆனந்த பவனத்திலே ஆனந்தம் ஆங்கிலேயன் மனத்திலே ஐயம்.

தேசீயத்தின் எழுச்சி கண்டார்கள் வெள்ளையர்கள்; குடல் நடுக்கம் கொண்டார்கள். எந்த நேரத்தில் தங்களுக்கு ஆபத்து வருமோ என்று பயந்தார்கள். *

சாதாரண அப்பாவி 'இந்தியன் ஒருவன், வெள்ளையர் வசிக்கும் வீட்டு வழியே சென்றுக் கொண்டிருப்பான். அவ்வளவு தான். அவனைக் கண்ட உடனே வெள்ளையனுக்கு நடுக்கம் வந்துவிடும். எந்த நேரத்திலே இந்தியன் தன்மீது பாய்ந்து தாக்குவானோ என்று பயந்து சாவான். உடன் ரிவால்வரைக் கையிலே எடுத்துக்கொண்டு நிற்பான்.

ஒன்றுமறியா இந்தியனோ தன் வழியே போய்க் கொண்டு இருப்பான். -

தன் வீட்டிலே வேலை செய்த இ ந் தி ய ர் க ைள வெள்ளையன் ஒரு போதும் நம்பியதில்லை. எப்போதும் சந்தேகக் கண்ணோட்டத்திலேயே இருப்பான்.

காந்தியின் அகிம்சைக் கொள்கையை அவர்கள் நம்ப வில்லை; சிறிதும் நம்பவில்லை, அது சுத்த ஏமாற்று வித்தை; வெறும் புரடடு எனறெல்லாம் எண்ணினார்கள். அகிம்சை, அகிமசை என்று மேலுக்குக் கூறி விட்டு, இரகசியமாக பெரிய தொரு ஆயுதப் புரட்சிக்குத் திட்டமிடுவதாகவே அவர்கள் கருதினார்கள். எனவே எந்த நிமிஷத்திலும் அது வெடித்து விடும் என்று எதிர்பார்த்தார்கள்.