பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27

27

ஸ்வருபா திருமணம்

1921 ஆண்டு மே மாதம் 10ந் தேதி ஜவஹரின் தங்கை ஸ்வரூபா என்ற விஜயலட்சுமிக்கு கல்யாணம் அலகாபாத்தில் நடைபெற இருந்தது.

காங்கிரசின் பெரிய தலைவர் பலரும் கல்யாணத்துக்குக் வந்திருந்தனர். மூத்த தலைவர் பலரும் வ ந் தி ரு ந் த காரணத்தால் காரியக் கமிட்டி கூட்டமும் நடைபெற்றது. அகில இந்தியத் தலைவர் பலரும் அலகாபத்துக்கு வருகிற போது உள்ளுர் குட்டித் தலைவர்கள் சந்தாப்பத்தை நழுவ விடுவார்களா?

இந்தத் தலைவர்களின் வருகையை அரசியலுக்கு நன்கு பயன்படுத்திக் கொள்ள விரும்பினார்கள் அவர்கள். எனவே, அரசியல் மகாநாடு ஒன்றும அலகாபாத்திலே நடைபெற்றது.

கேட்க வேண்டுமா? ஒரே கோலாகலம்! எங்கும் எழுச்சி! எங்கும் கிளர்ச்சி! எங்கும் ஒரே உற்சாகம், ஆரவாரம்! தேசீயவாதிகள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள்.

சுற்றுப்புற கிராமங்களிலிருந்து ஏராளமான மக்கள் அலகாபாத் நகருக்கு வந்திருந்தனர். எங்கும் கூட்டம், கூட்டம், பெருங்கூட்டம்.

இது கண்டு நடுங்கினார்கள் அலகாபாத்திலே வாழ்ந்த வெள்ளையர். புரட்சி எப்போது வெடிக்குமோ என்று அஞ்சி செத்தனர். எந்த நேரத்திலே தங்கள் வீ டு க ைள த் தாக்குவார்களோ என்று பயந்தனர். தங்களை கொன்று குவித்து விடுவரோ என்று திகில் .ெ கா ண் ட ன ர். ரிவால்வர்களை எல்லாம் எடுத்துத் தயார் நிலையில் வைத்து கொண்டிருந்தனர்.