பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

42

'வக்கில் தொழிலைத் தொடங்கட்டுமா, அப்பா ?”

'ஏன் ე··

'சம்பாதிக்காமல் எத்தனை நாள் தங்களுக்குச் சுமையாக இருப்பது'

"எனக்கென்ன சுமை?”

'இல்லை, என் சொந்தச் செலவுக்குக் கூட உங்களைத் தொந்தரவு செய்ய வேண்டிருக்கிறதே என்றுதான்!”

‘பைத்தியம் ! தினமும் கோர்ட்டுக்குப் போய் உனது நேரம் முழுவயுைம் அங்கே செலவிட்டு ஒரு வருஷத்தில் நீ சம்பாதிக்கக்கூடிய பணத்தை நான் நாலே நாளில் சம்பதித்துத் திருவேனே வருடம் முழுவதும் நீ ஹாய்யாகச் செலவு செய்யலாமே. சந்தோஷமாகக் காங்கிரஸ் வேலையைக் கவனி, உனக்கும் உன் மனைவிக்கும் வேண்டிய பணத்தை தான் சம்பாதித்துக் கொடுக்கிறேன், ஒன்றும் வேண்டாம், சும்மா இரு !' என்று வாயடைத்து விட்டார் பெரியவர்.

தமது அருமை மைந்தன் அரசியல் வானில் ஜகஜ்ஜோதி ஆகப் பிரகாசத்துடன் எழுவதைக் கண்டார்; மனம் பூரித்தார்; மகிழ்ச்சி; மகிழ்ச்சி; பெரு மகிழ்ச்சி.