பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

76

பிள்ளையை எவ்வளவு நாள் வெளியே விட்டு வைக்கப் போகிறது ? ரொம்ப நாள் ஜவஹரை வெளியிலே நிச்சயம் விட்டு வைக்காது. எந்த சமயத்தில் சிறைக்குக் கொண்டு போய்விடுமோ ? அது வரையிலாவது பிள்ளையுடன் இருப்போமே !”

இவ்வாறு எண்ணியே அவ்வாறு கூறினார் பெரிய நேரு. அதன்படி மறுநாளே அலகாபாத்துககு புறப்பட்டார்.

ஜவஹரும் கமலாவும் முசோ ரியிருந்து ஆனந்தமாக வந்துக் கொண்டு இருந்தபோது, டேராடூனிலே வழி மறித்தது போலீஸ், வாய்ப் பூட்டுச் சட்டம் போட்டது. லகஷ்மணபுரிக்கு வந்தார்கள். அங்கும் டேராடூன் போலவே நடந்தது.

பதினெட்டாம் தேதி இரவு. ஜவஹரும் கமலாவும் அலக்ாபாத் வந்து சேர்ந்தனர்.

மறுநாள் தான் விவசாயிசன் மகாநாடு. மிகப்பிரமாதமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. காலையில் வந்தது போலீஸ். மீண்டும் வாய்ப்பூட்டு உத்தரவை வழங்கியது. யாருக்கு? ஜவஹருக்கு.

ஜவஹர் என்ன செய்தார் ?

மகாநாட்டுக்குச் சென்றார். வீர முழக்கம் செய்தார். வரி கொடா இயக்கம் தொடங்க முடிவு செய்தது மகாநாடு.

இரவு பணி பத்து. ஜவஹரும் கமலாவும் காரில் வீடு நோக்கி வந்துக்கொண்டு இருந்தனர். தெருக் கோடியிலேயே காத்திருந்தது போலீஸ்.

காரை நிறுத்தியது; ஜவஹரைக் கைது செய்தது; ஜீப்பில் ஏற்றிக் கொண்டது : விரைந்து சென்றது.