பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

78

குணமாகிவிட்டது. உம்! பார்த்து விடுகிறேன் ஒரு கை' என்று சீறினார். காங்கிரஸ் கமிட்டிகளுக்கெல்லாம் சுற்றறிக்கை அனுப்பினார்.

“நவம்பர் மாதம் 14ந் தேதி ஜவஹரின் பிறந்தநாள்; அந்த நாளைக் கொண்டாடுங்கள். ஜவஹர் தினமாகக் கொண்டாடுங்கள். பொதுக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யுங்கள். சொற்பொழிவு நிகழ்த்துங்கள். என்ன சொற்பொழிவு ? எந்த சொற்பொழிவுக்காக ஜவஹர் தண்டிக்கப்பட்டாரோ அதே சொற்பொழிவை அந்தக் கூட்டங்களிலே நிகழ்த்துங்கள். இந்த அரசாங்கம் என்ன செய்கிறது என்று பார்க்கிறேன்."

சுற்றறிக்கையைக் கண்டவுடன் பெரிய நேருவின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டது நாடு. நாடு முழுவதும் ஜவஹர் தினம் கொண்டாடப்பட்டது. நாடெங்கும் ஊர்வலங்கள், பொதுக் கூட்டங்கள் சொற்பொழிவுகள்.

அரசாங்கம் என்ன செய்தது ? குண்டாந்தடியால் அடித்தது; ஊர்வலங்கள் மீது குதிரைப் படையை ஏவியது. பலரைக் கைது செய்தது.

அன்று ஒரு தாள் மட்டும் ஐயாயிரம் பேர் சிறை சென்றனர்.

ஜவஹர் தினம் இவ்வாறு தனிச் சிறப்புடன் கொண்டாட பட்டது.

அலகாபாத் ஜில்லாவிலே வரி கொடா இயக்கம் ஆரம்பமாயிற்று. காட்டுத் தீப் போல் பரவியது. இந்த இயக்கம் ஐக்கிய மாகாணம் முழுவதும் பற்றி எரிந்தது.

அடக்கு முறையைக் கட்டவிழ்த்து விட்டது அரசாங்கம். எங்கே? சிறைக்குள்ளே அரசியல் கைதிகளைக் கொடுமையாக நடத்தியது. பிரம்பால் அடித்தது.