பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79

79

அது கண்டார் ஜவஹர்; சீறினார்; உண்ணாவிரதம் தொடங்கினார்; மூன்று நாள் உண்ணாவிரதம்.

சிறையிலே ஜவஹர் உண்ணாவிரதமிருக்கும் செய்தி எங்கும் பரவியது. செல்வக் குமரனைக் காண வந்தார் பெரிய நேரு.

தந்தையைக் கண்டார் இளைய நேரு, மணம் பதறினார். ஏன் ?

அஞ்சா நெஞ்சம் கொண்ட மோதிலால் - கம்பீரமான வீரத்திருவுருவத்துடன் விளங்கிய மோதிலால் - மெலிந்து, முகம் சுருங்கி, கண்கள் ஒளியிழந்து, தளர்நடையுடன் &5ff6ðğTi_ft_J L-1-ff ff.

‘அப்பா உடம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளுங்கள்' என்றார் இளைய நேரு. அவரது கண்கள் நீர் சொரிந்தன. தந்தையின் உடல் நிலை அவரை வாட்டி வதைத்தது.

இருபத்தி ஏழாம் அத்தியாயம் முதல் வட்ட மேஜை மகாநாடு

1930 நவம்பர் மாதம் பன்னிரண்டாம் தேதி லண்டனிலே வட்ட மேஜை மகாநாடு கூடிற்று. எண்பத்து ஒன்பது பிரதிநிதிகள் கூடினார்கள்.

இங்கிலாந்தில் உள்ள கட்சிகளின் பிரதிநிதிகள் பதினாறு பேர். இந்திய சமஸ்தானங்களின் பிரதிநிதிகள் பதினாறு பேர். பிரிட்டிஷ் இந்தியாவின் பிரதிநிதிகள் ஐம்பத்து ஏழு பேர்.