பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85

85

' காந்தி என்னும் அரை நிர்வாணப் பக்கிரியை அழைப்பது அவமானம், நமக்கு சமமாக, சர்க்காருக்கு எதிராக சத்தியாக்கிரக போர் செய்யும் காந்தி நம் நாட்டுக்கு எதிரி, வைசிராயின் மாளிகைப் படிக்கட்டுகளை அவர் ஏறுவது எத்தகைய அவமானம்; மாட்சிமை பொருந்திய மன்னர் பெருமானின் பிரதிநிதிக்கு எதிராக வீற்றிருக்க அவருக்கு என்ன தகுதி? நம் பிரதிநிதிகளுக்குச் சரிசமமாக அந்த காந்தி பேசுவதை என்னால் சகிக்க முடியவில்லையே! காணவும் முடியவில்லையே! கண்ணை உறுத்துகிறதே!” என்று பிரலாபித்தார் சர்ச்சில்.

முப்பதாம் அத்தியாயம்

காந்தியடிகளும் இர்வினும்

லார்டு இர்வின் சமாதானம் விரும்பினார். வட்டமேஜை மகாநாடு மீண்டும் கூடினால் அதிலே காங்கிரஸ் கலந்துக் கொள்ளவேண்டும் என்று விரும்பினார். எப்படியாவது காந்தியுடன் சமரசம் காண முனைந்தார்; பேசத் தொடங்கினார்.

காங்கிரஸ் காரியக் கமிட்டி கூடியது. எங்கே ? டில்லி மாநகரிலே, டாக்டர் அன்சாரி மா னீ ைக யி .ே ல ஆலோசிப்பதற்காகக் கூடியது.

“ பூரண சுயராஜ்யமே நமது லட்சியம், அதை நழுவ விடலாகாது. அதற்குக் குறைந்த எதையும் ஏற்கலாகாது! " என்று கர்ஜித்தார் நேரு.

பர்தோலி சத்தியாக்கிரகிகளின் கதி என்ன ? பறிமுதல் செய்த நிலங்களை எல்லாம் திருப்பிக் கொடுக்கவேண்டும் இன்றேல் சமரசத்தை ஏற்கமுடியாது ' என்று உறுமினார் சர்தார் வல்லபாய் படேல்.