பக்கம்:சோஷலிஸ்ட் ஜவஹர்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

9ū

அன்சாரி மாளிகையிலே இருந்த தலைவர் பலரும் தூங்கி விட்டனர். எல்லோரையும் எழுப்பினார் காந்தி.

'சமரசம் ஏற்பட்டு விட்டது.” என்றார்.

சமாதானமா? எல்லாவற்றையும் ஒப்புக்கொண்டு விட்டீர்களா ?” என்றார் நேரு ஆத்திரத்துடன்.

2 3

' ஆம்

" அப்படி செய்திருக்கக் கூடாது ' என்றார் நேரு.

“ இப்பொழுது என்ன சொல்கிறீர்கள்? வைசிராய்க்கு போன் செய்யவா? மோதிலால் இருந்தால் இப்படி இருக்குமா?’ என்றார் காந்தி, அவ்வளவு தான்! சீறிய பாம்பு மீண்டும் பெட்டிக்குள் அடங்குவதுபோல் அடங்கிவிட்டார் நேரு. ஆனால் மனமோ அடங்கவில்லை. உள்ளம் துடித்தது. தூக்கம் வரவில்லை; இந்த அற்ப சமாதானத்திற்காகவா தடியடி பட்டோம் இந்த குட்டி சுதந்திரத்திற்காகவா சிறை சென்றோம் ?’ என ஏங்கினார் ; கண்ணிரும் சொரிந்தார்.

முப்பத்தி ஒன்றாம் அத்தியாயம்

ஒப்பந்தத்தின் உள்ளே !

மார்ச் மாதம் இறுதியில் காங்கிரஸ் மகாசபை கராச்சி நகரிலே கூடியது. சர்தார் வல்லபாய் பட்டேல் தலைமை வகித்தார். காந்தி இர்வின் ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப் பட்டது.

லண்டன் வட்டமேஜை மகாநாட்டில் கலந்துக்கொள்வது என்றும் முடிவு செய்தது.