பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் * 15

தாங்கிக்கொண்டாள். நாக்கு இழுத்துவிட்டது. எல்லோ ரிடமும் தனித்தனியாக செலவு பெற்றுக் கொண்டாள். என்னைப் ப்ரத்யேகமாக அனைத்துக் கொண்டாள். அவள் கண்களில் கண்ணாடி பளபளப்பு ஏறும்வரை எப்படி என்மேலேயே கடைசிவரை நிலைத்திருந்தன! அவளுடைய வார்த்தைகள், செயல்கள், காரியங்கள், அவள் ஃபிடில் வாசித்தது. அவள் கல்யாணமாகாமலே உள்ளூரவே புழுங்கிப்போனாள். அதுவே அவள் மறைவுக்குக் காரணமா யிருந்தது. இப்படி நினைத்து, நினைத்து அப்படியும் அஸ்த்திப்பானையை நான் கடலில் தூக்கி எறிந்ததும் அலை கைபோல் வந்து ஏந்திக்கொண்டு சென்றது. அப்பவே

அவள் தரங்கினி'யாக மாறினது.

ராமரத்னம் அவள் மறைந்தபோதிருந்த யவ்வனத் திலேயே உறைந்து போனாள். அவளுக்கு மறைவே கிடையாது. இப்படித்தான் செளந்தர்யத்திற்கு உண்மையின் பதவியும் மாறுவதில்லை.

ஏற்கெனவே நான் சொல்லியபடி நான் உணர்ச்சி

மேம்பட்ட எழுத்தாளன். என்னைப்பற்றி மாத்திரமல்ல, பொதுவாக விமர்சகர்களின் கருத்து. எழுத்தின் இலக்கணப் படி எந்தக் கட்சியும் சாகக்கூடாது. உள்ளதை உள்ளபடி எடுத்துக்காட்டுவதுடன், அதேசமயம் மனோதத்துவ ஆராய்ச்சிப்படி வாழ்க்கையே ஒரு நீண்ட உணர்ச்சி சரடு. அப்போது உணர்ச்சியிலிருந்து எப்படி எழுத்து முற்றிலும் விடுபட முடியும். ஒருமடமாதும் ஒருவனுமாகி என்று ஆரம்பித்து

பரிகாசம்போல் கடித்த பாம்பு

பலபேர் அறிய மெத்த வீங்கி