பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ić •o செளந்தர்ய.

பட்டினத்தார் எவ்வளவு அழகாக பிறவியே ஒர் உணர்ச்சிப் பிண்டம் என்று எள்ளி நகையாடுகிறார். எழுத்தை ஒரு தெளிந்த நீரோடையாக முயற்சிக்கலாம். அப்படியும் அதன் ஸ்படிகம் நம் உணர்ச்சியினைத் து.ாண்டவில்லையா?

இப்படி நினைத்து நினைத்துத் தனி மணம் கொண்டு யrதேவதையாய் மாறிவிட்டாள். அதாவது, யதார்த்தம், கவிதார்த்தமாகி, கவிதை நிரந்தர செளந்தர்யத்தை அடைந்து விடுகிறது. செளந்தர்யத்துக்கும் தத்துவார்த்தம் இருக்கிறது. அது கிட்டுவது சுயமுயற்சியால் மட்டுமன்று. ஒரு தற்செயல், ஒரு பாக்கியம். எனக்கு இப்பவே கொஞ்சம் கொஞ்சம் அந்த நிலை அனுமானிக்க முடிகிறது. நாம் அதுவாகி விடுகிறோம். எதைப் பார்த்தாலும் அழகாயிருக்கிறது. மனமே நீரோடை

அம்பாளின் கால் சிலம்பொலி கேட்கவில்லை? உலகமே உபமானங்களும் உபமேயங்களுமாக மாறிவிடுகிறது. நிஜத்தின் ஸ்வரூபங்களில் இப்படியும் ஒன்றோ? கவிதையின் சொறிதல் என்னைச் சூழ்ந்து நிரந்தர கமகம.

இது நடையலங்காரமாக இருக்கலாம். ஆனால் நடைக்காக அலங்காரமில்லை. என் தங்கை மறைவில் நேர்ந்த மார்வெடிப்பின் உக்ரத்துடன் அவளே கவிதை யாய் மாறிய சோகம், இன்பசோகமாகக் கலந்து மாறிய கலவையின் விளைவு அலங்காரமாகத் தோன்றுகிறது. இது ஸ்ருஷ்டியின் ஒரு இன்றியமையாதத்தன்மை. தாய் பிரசவ வலியில் உயிராபத்தில் வீறிடுகிறாள். குழந்தை பூமியில் விழுந்து அதன் முதல் வீறலை ஆரம்பித்ததுமே இவளுடைய அத்தனை வேதனைகளும் தீர்ந்து விடுகிறது. குழவி முகம் பார்த்ததும் மார்பு சுரக்குகையில் அந்த முதல் தரிசனத்