பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் * 4;

ரேடியோ கேட்கத் தனி ஸ்பீக்கர் ஆணியில். T.V. பார்க்க தாழ்வாரத்துக்குப் போய் விடுவார். சாப்பாடு ஸ்டுலில். தனக்குக் காது கேட்கவில்லையாதலால் அவருக்கும் பேச்சு அடங்கி குரலில் தனி கம்மல் வந்துவிட்டது. கோயிலுக்கு பூஜைசெய்ய இவர் போவது என்றைக்கோ நின்றுபோய் விட்டது. வைத்தியம் பார்ப்பார் நாடி பிடித்துப் பார்ப்பார். திருஷ்டி கழிப்பார். அவருடைய கைராசிக்கென்றே சிலர் வருவார்கள். அவருடைய கவனங்கள் அத்துடன் சரி.

கோயிலை அவருக்கு பதில் கவனிக்க- அவரையும் விசாலத்தையும் கவனிக்க இப்போது இவர்களுடைய மருமான் குடும்பந்தான் வாரிசு.

"வலிக்குதா என்ன? இப்ப கவர்மென்ட் சம்பளமே வந்தாச்சு. வெள்ளிக்கிழமை விசேஷ தினங்களில் தட்டுல கணிசமாய் சில்லறை விழுது. ஐப்பசி மாசம் சூரசம்ஹாரம் சமயத்துல வெளியிலேர்ந்து உதவிக்கு ஆளையே வர வழைச்சுக்கறோம். அமாவாசை தர்ப்பணம் பண்ணறவங் களும் இருக்காங்க சரி. நான் வரேன். பத்துமணி பஸ்ஸை பிடிக்கணும்.”

“என்ன விசாலம் ஜீல் காட்டறே. இப்பத்தானே வந்தே இன்னிக்கு தங்கக்கூடாதா?”

என் கைமேல் தன் கை பொத்தினாள். “நாளைக்கு திருவாதரை, ரெண்டு மண்டகப்படி இருக்கிறது. ரெண்டுபடி சுண்டல் போடணும். ரெண்டுபடி சர்க்கரைப்பொங்கல் வேறே. இதெல்லாம் மருமாளால சமாளிக்க முடியாது. நான் கிளம்பறேன். நீங்க எழுந்திருக்காதீங்க”- சொல்லிக் கொண்டே விறுவிறுவெனப் போய்விட்டாள்.

நான் பெருமூச்செறிந்து கட்டிலில் சாய்கிறேன். சற்று இருண்ட மாதிரி மனம் கவிகின்றது. இவள் ஏன் வந்தாள் இருட்டை அதிகரிக்கவா?