பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் * 55

மனசைத் தானே சமாதானப்படுத்துவது போல தனக்கே பேசிக் கொண்டார். எனக்கு மனசை அறுத்தது. சந்தேக மில்லாமல் நான் திருடன்தானே. நான் அந்த இடத்தைவிட்டு அகன்றேன்.

விசாலாட்சியின் பேச்சு கலகலப்பாகிவிட்டது. ஒருவருக் கொருவர் முறுக்கிக் கொள்ளவில்லை. விசாலாட்சியின் அப்பா மாதம் இருமுறை வருவார். அவளைப் பார்ப்பதாக ஐதீகம். வாட்ட சாட்டமாய் நல்ல சிவப்பாய் பட்டைத் தீட்டிய பஞ்சகச்சம். மேலே போர்த்திய பச்சை சால்வை. நல்ல சிவப்பு. வயதாகி விட்டாலும் நன்றாக இருப்பார். ஆனால் விசாலம் அவருடன் பேசுவதில்லை.

“என்ன உங்கப்பா வந்திருக்காரே. கவனிக்கலையா?” அவள் புருவங்கள் நெரிந்தன. மூக்கு சிவப்பிட்டது.

“பேமாணி.”

எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. "அவர் குடும்பத்தையே கவனிப்பதில்லை. இந்த வயசில் அவருக்கு பொம்மனாட்டி ஷோக்கு அவருக்கு சம்மதிக்கற வங்களும் இருக்காங்க. நாங்க பெண்கள் மூன்றுபேர். கல்யாணம் அவரா பண்ணினார்? அம்மா சொத்தை அழிச்சார். இன்னும் அழிக்க ஏதேனும் மிச்சமிருக்கிறதா என்று வேவு பார்க்க வருகிறார்.”

நான் பேச்சைத் தொடரவில்லை. வாய் அடைத்துப்போயிற்று. அவள் அப்பா வயண மில்லை. என் அப்பா Saint. நான் அவருக்கு லாயக்கா என்று குழப்பத்தில் என் வீட்டிற்குக் கிளம்பிவிட்டேன்.