பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 や செளந்தர்ய.

சமீபமாக ஒவ்வொரு செவ்வாயும் மதிய சாப்பாட்டுக்குப் பிறகு விசாலம் காஞ்சீபுரம் போய், பிற்பகல் மூன்று மணிக்குத்தான் திரும்புகிறாள். ஏன் என்று கேட்டேன். பிரதி செவ்வாயும் ஒரு பக்தன் முருகக்கடவுளுக்கு மல்லிமாலை சாற்றுவதாக ஏற்றுக்கொண்டிருக்கிறானாம். அதற்காக மல்லி வாங்கப் போகிறாளாம். அவன்தானே மாலை வாங்கணும்? அவன் தறியில் இறங்கி விடுவதால் மாலை வாங்க சாத்தியமில்லை. “காசை வீசி எறிஞ்சால் யாரேனும் பூக்காரி கொண்டு வந்து கொடுக்கிறாள். நீ மெனக்கடனுமா? "உங்கள் பட்டணத்துப் பழக்கமெல்லாம் இங்கு வேவாது. வீசி எறிய யாரிடம் காசு இருக்குது. எங்கிட்டே இருக்குதா? நான் ஏன் போறேன்னா பூவாக வாங்கினால் வீட்டுக்கு வந்து தொடுத்து முருகனுக்கு சாத்தினது போக எனக்கு ஒரு முழம் கிடைக்காதா. தவிர மத்தியானத்துலே நான் இங்கே என்ன வெட்டி முறிக்கிறேன்?”

ஒரு செவ்வாயில் அவளுடன் காஞ்சீபுரம் சென்றேன். பூக்கடை பெரிய காஞ்சீபுரம் பக்கத்திலிருக்கிறது. ஆடிசன் பேட்டையில் பஸ் இறங்கி, நடக்கணும். பட்டை வெய்யிலில் செமை நடைதான். பூக்கடை பட்டணம் போல கட்டடமல்ல. ஒரு மைதானத்தில் போர் போராகவும் கூடையிலுமாக வைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் அந்த இடத்தில் நுழைந்தவுடன் வெக்கை குளிர்ந்து விடும். பூ கால் படியோ அரைப்படியோ வேண்டுதல்காரன் அனுமதித்தது எவ்வளவோ.

விசாலம் நன்றாக பேரம் பேசுவாள். அப்புறம் கொசிர். அதையும் கணிசமாக்கி விடுவாள். இந்தக் கொசிர் கோவில் மாலைக் கணக்கில் போவாது. அவள் விழிகளில் குறும்பு கூத்தாடிற்று. ஒரு வழியாக வெளியே வந்ததும் எனக்குப்