பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 : செளந்தர்ய.

பஞ்சமில்லை. பயிருக்குக் கஷ்டமில்லை. வெய்யிலும் கொடுமையில்லை.

நான் விசாரித்ததில் வைத்தி வீடு ஒரு மேட்டிலிருக்கிறது. புல்லைக் கையால் பிடித்துக் கொண்டு ஏறினேன். எது வேனுமானாலும் என்னைப் பிடுங்கி இருக்கலாம். வைத்தி வீட்டில் கதவை மூடி விட்டார்கள். நாழியாகவில்லை. தட்டும்படி ஆகிவிட்டது. வைத்தி லாந்தரை என் முகத்துக் கெதிரே நீட்டினான். வெட்கம், ஆச்சர்யம், சந்தோஷம் மூன்றும் குழைந்த சிரிப்பில் அவன் கண்கள் பளபளத்தன. நான் பழையசாதம் போதும் என்று கண்டிப்பாய் சொல்லிவிட்டேன். அந்தப் பழையதின் ருசியை அதனுடன் வட்டித்த அன்பை இப்போது நினைத்தாலும் கண்களில் துளும்புகிறது. அந்தப் பாதி இருட்டில் விசாலாட்சியின் நிறம் ஜொலிக்கிறது. உள்ளே இருந்த ஒரு கயிற்றுக் கட்டிலை எனக்கு விட்டுவிட்டு அவர்கள் கீழே படுத்து விட்டார்கள். ஆனால் எனக்குத் தூக்கம் சரியாக வரவில்லை. ஏதேதோ யோசனை. நல்லதும் குழப்பமாகவும் சேர்ந்து, நள்ளிரவில் இதுபோல் ஒடி வந்திருக்கிறேனே. இது இவள் மேல் காதலா? இன்னும் அலசிக்கொண்டிருக்கிறேன்.

அப்போது பதில் சரியாகக் கிடைக்கவில்லை. இப்போது தெரிகிறது.

"விசாலாட்சி மேல் இது காதல் இல்லை”

வாழ்க்கையில் முதன்முதலாய் பார்த்த உடனேயே சிலபேர் மேல் இனம் தெரியாத பாசம் ஏற்பட்டுவிடுகிறது. வெறுப்பும் அப்படித்தான். போகப் போக உறவு அவர்களுடன் நெருக்கம் ஆகுகையில் ஆரம்பத்தில் கண்ட உணர்வு ஊர்ஜிதமாகிறது. அவர்களுடைய குணங்கள் குற்றங்களுக்கும் இந்த உணர்வுக்கும் சம்பந்தம் கிடையாது.