பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ល៣. ៩. ព្រោញៈ * 87

கோவையாயில்லாவிடினும் தனி நகrத்திரங்களாய் டால்' விடுகின்றன. அவைகளில் நான் முழுகி விடவில்லை. தனித்தனி மின்கள் என்னைச் சுற்றித் திளைக்கின்றன.

உங்களிடம் செலுத்தித்தான் ஆகவேண்டுமா? என்னைச் சுற்றி அவை. அவை நடுவே நான் என்று இருந்துவிட்டுப் போகிறேனே!

அட அசடே உன் நிலை மறந்துவிட்டதோ. எப்பவுமே உனக்காகத்தான் நீ இருக்கிறாய். நீ என்றும் நான் என்றும் தனி ஏது? எப்பவுமே எனக்காகத்தான் நான் இருக்கிறேன்! உன் சுடர் உனக்குக் கூசுகிறது. என் சுடர் எனக்குக் கூசுகிறது. நான் சொல்வதைத் திருப்பிச் சொல்கிறாயா? யாருமே வேறெதைச் செய்து கொண்டிருக்கிறார்கள்? திரும்பத் திரும்ப விளம்ப விளம்ப நம் மெருகு நமக்குக் கூடுவதை சில சமயங்களில் நாமே உணர்கிறோம்.

இன்று வைத்தி என்னைப் பாட அழைக்கிறான். பாடுவதற்கென்றே பட்டணத்திலிருந்து வந்திருக்கிறேன். நாளைக் காலை என் வயிற்றுப் பிழைப்புக்காக என் வேலைக்குப் போய் விடுவேன். மறுபடியும் எப்பவோ? எப்போ ஆனாலும் சரி. இப்போ ஆகாது. அது வேறே இப்போவாக இருக்கும். அதுவே ஏதோ துக்கமாக இல்லை! அன்று தெரியாவிட்டாலும் இன்று தெரிகிறது.

இங்கு விட்டுப் போகும் போது, என் பாட்டின் நாத பிந்துக்களை விட்டுச் சென்றுவிடுவேன். இது கவிதையன்று. ஒரு தவிர்க்க முடியாதது. விஞ்ஞான உண்மை. அவை நான் இறந்த பின்னரும், நான் என்ன வைத்தி, விசாலி இறந்த பின்னரும் மீண்டும் தம் உச்சரிப்புக்கு காத்துக்கொண்டு மோனவெளியில் மிதந்துகொண்டிருக்கும் என்பதே ஒரு சோகமானாலும் எனக்கு அழிவில்லை என்று சந்தோஷ மாகவும் இருக்கிறது.