பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 * செளந்தர்ய.

இரவு வெளிச்சத்துடன் எண்ணத்து மந்தாரமும் கலந்து மந்திரம் புரிகிறது.

குடிசைக்கு வெளியில் மேடாக அமைந்த பாறாங் கல்லில் அமர்ந்துவிட்டேன். அவர்களிருவரும் என் அருகே புற்றரையில் அமர்ந்தனர்.

முதல் தம்'மின் போதே குரல் நன்கு வாய்த்துக் கொண்டது அறிந்தேன்.

அவுட் அடித்துக்கொண்டு வானவெளியில் கலந்தது. வைத்திக்காகப் பாடினேனா? விசாலத்துக்காகவா? எனக் காகவேயா? என்னிலிருந்து புறப்பட்ட ஜீவாதார ஸ்ருதியின் இயல்பில் என்னை ஒரு சாக்காகக் கொண்டு என்னிலிருந்து வெளிப்பட்டதா?

ஒரு செருக்கு வியாபித்துக் கொண்டது. நாதச் செருக்கு என்னால் இன்று முடியாததில்லை. தங்கக் கழுகு, தன் பொன் சிறகுகளை விரித்துத் தன் தனிமையில், ஆகாயத்தில் நீந்துகிறது.

"ராமாமிர்தம்' "ராமாமிர்தம் வைத்தியின் அவசரக் குரல் என்னை இவ்வுலகுக்கு இழுத்தது. விசாலத்தை வைத்தி தாங்கிக் கொண்டிருந்தான். விசாலம் நினைவிழந்திருந்தாள். அவளைத் தொடக் கை துடித்தது. ஆனால் அஞ்சிற்று. என்ன ஆச்சர்யம்! “மார்ல கை வெச்சுப்பாரு. துடிப்பு இருக்கா? ஆபத்துக்கு தப்பில்லே பாரு!”

முகத்தில் தண்ணிரைத் தெளித்துத் துடைத்தேன். கண் விழித்தாள். தன்நிலை தெரிந்து எழுந்தாள்.

என்ன ஆச்சு!

33

"நீதான் சொல்லணும்.