பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ధో

லா. ச. ராமாமிருதம் * 83

“பச்சை இருட்டில் வண்டு கூவிகிட்டேயிருந்தது அதுதான் தெரிஞ்சது. அப்புறம் அதுவும் தெரியல்லே. என்னவோ நல்லாயிருந்தது. ஒரு அஞ்சு நிமிஷம் பொறுத்துக் கங்க. அப்பளம் பொரிக்கறேன்.”

அன்றிரவு எனக்குச் சரியான தூக்கமில்லை. ஏதேதோ யோசனை.

நாதாந்தமோனம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதற்குப்பின் ஆசைப்படவோ ப்ரயத்தனத்துக்கோ ஏது மில்லையாம். ஆனால் மனம் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கும். மோனானந்தத்துக்குப் பிறகு எதுவுமில்லையா? உயிர் எங்கிருந்து புறப்பட்டது? நாதத்திலேயா? மோனாந்தத் திலேயா? மனம் என்று ஒன்று படைத்து- இல்லை அதுவே தன்னைப் படைத்துக் கொண்டதா? இல்லை. படைத்துக் கொண்டது என்று ஒன்றுமில்லை. தானே உண்டாயது என்று எனக்கு அன்றே தோன்றிவிட்டது. அது ஒன்றே போதும். அதன் படுத்தலின் வடிகாலுக்கு ஸ்தூலம் ஒன்று வேண்டும். Let there be life! and there was life, and there is life and there will be life, and mind for ever.

"ராமாமிருதம் உங்க பஸ்ஸுக்கு நேரமாச்சு.”

அன்று ஆரம்பித்தது. பின்னர் எங்கள் மூவரின் சந்திப்பு முன்னளவுக்கு நேரவில்லை. நான் நல்ல வேலைக்கு மாறி அதில் ஸ்திரமானேன். பல மாதங்கள் கழித்து வைத்தி தன் அபூர்வமான கடிதங்களுள் ஒன்றில் தன்னை தர்ம கர்த்தாக்கள் ஐயன்பேட்டைக்கு அழைத்துக் கொண்டார் களாம். அவர்கள் ஏற்பாடு செய்துகொண்ட குருக்கள் சரிப்பட்டு வரவில்லையாம். “எப்படியும் உங்க மாதிரி வருமா?’ இப்பொழுது தனிச் சம்பளத்துக்கு சம்மதித்து விட்டார்கள். அமாவாசை உண்டியலிலும் பங்கு உண்டு.