பக்கம்:சௌந்தர்ய-நினைவாஞ்சலி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

0 & செளந்தர்ய.

அர்ச்சனை, அபிஷேகம், தர்ப்பண தக்ஷணை கொஞ்சம் கூடுதல், பிச்சைக்காரனுக்கும் சுக்ரதசை என்றால் புதையலா கிடைக்கும்? இரண்டு ரூபாய்க்கு பதில் அஞ்சு ரூபாய், அதுவே சந்தோஷம்தான். கிராமத்துக் கோயில் குருக்கள் பிழைப்பு இதுதான். அன்றாட பிழைப்புத்தான் உன்னை உடல் ஆரோக்யத்தில் மனச்சுறுசுறுப்பில், கிடைத்தது திருப்தியிலும் வைத்திருக்கிறது என்று படியளக்கும் தெய்வம் வைத்திருக்கிறது.

வாடாதவூரின் Faily land தன்மை போச்சு. அந்தப் பக்கம் நாங்கள் யாரும் மீண்டும் போகவில்லை. வைத்திக்கு அவனுடைய முருகக்கடவுள் கிடைத்துவிட்டார். (அல்லது முருகக்கடவுளுக்கு வைத்தியா?) என்னை முருகன் கைவிட மாட்டான். முருகனிடம் ஒரு தனி பக்தி இருக்கத்தானிருந்தது. வயிற்றுப்பிழைப்பின் உழைப்பும் அவசியம் தவிர விசாலம் அவனைப் போலவே நினைத்தாளோ? அவளுக்குத்தான் தெரியும். அவளுக்கே தெரியுமோ இல்லையோ? அவள் பங்குக்கு அதன் சிரமங்கள்தான் குருக்கள் சம்சாரம் சமாளிக்க வேண்டும் என்கிற கட்டாயம்தான் அவளை அழுத்திக் கொண்டிருக்கும் என்று நினைக்கிறேன். வேலையில் தவம் அதுதான். அதைப் பொருட்படுத்தினால் அதைச் செய்ய முடியாது என்பது அவள் சித்தாந்தம். என் தாயாரின் எண்ணமும் அப்படித்தான். என் தாயாரின் எண்ணம் ஒவ்வொன்றுக்கும் ஒரு பேரைக் கொடுத்து விட்டால் அதற்குக் கைகால் எலும்பு முளைச்சுடும். ஐயோ இது இப்படியா என்று அங்கலாய்த்தாலே சோம்பேறித்தனம் தலை காட்டிவிடும். ஏழையாயிருப்பவர் எப்பவும் தயாரா யிருப்பர். இப்படியெல்லாம் இன்றையப் பையன்களுக் காகட்டும் பெண்களுக்காகட்டும் புத்தி சொல்லிக் கொடுக்கற

வயசா அல்லது அவர்தாம் கற்றுக் கொள்பவர்களா?