பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

செளந்தர கோகிலம்



தில்லை. இந்தப் பிடிவாதத்துக்கு என்ன செய்கிறது? அதுதான் எங்களுக்கு இரவு பகல் கவலையாக இருக்கிறது. எனக்கு கோகிலாம்பாளைப் பற்றிக் கொஞ்சமும் கவலையே இல்லை. இந்தச் சொத்துக்கள் முழுவதையும் ஆண்பிள்ளையின் துணை யின்றி அவள் ஒருத்தியே நிர்வகித்துப் பார்த்துக் கொள்ளுவாள்.

கற்பகவல்லியம்மாள்:- முன் காலத்தில் தாய் தகப்பன்மார் பல விஷயங்களையும் ஆழ்ந்து யோசித்து எங்கே கட்டிக் கொடுக் கிறார்களோ, அங்கே பெண்கள் வாழ்க்கைப் படுவார்கள் இப்போது காலம் மாறிப்போய் விட்டது. இங்கிலீஷ்காரருடைய கொள்கையெல்லாம் நம்முடைய தேசத்தில் நிரம்பவும் பரவிப் போய் விட்டது. அவர்களுடைய இஷ்டப்படிதான் பெரியவர்கள் நடக்க வேண்டி வந்துவிட்டது. ஆனால் இதில் முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது. அவரவர்களுடைய விதி ஒன்று இருக்கிறது. அதன்படிதான் ஒவ்வொருவருக்கும் புத்தி போகும். நாம் ஏதோ நம்முடைய அறிவுக்கு எட்டியவரையில், நல்ல காரியத்தைச் செய்ய முயற்சித்தாலும், எதுவும் விதிப்படிதான் நிறைவேறும், சின்னக் குழந்தையின் புருஷரும் ஏற்கனவே ஏற்பட்டிருக்கிறார். அவரை விட்டு வேறொருவர் அந்தக் குழந் தையைத் தொடவும் முடியாது. ஆகையால், நீங்கள் ஏன் வினில் கவலைப் படுகிறீர்கள்? எல்லாம் அதற்குப் பொருத்தமாகத்தான் வந்து லயிக்கும்.

பூஞ்சோலையம்மாள்:- நீங்கள் கடைசியாகச் சொன்னது நூற்றில் ஒரு பேச்சு மூத்த குழந்தையின் மனப்போக்குக்குத் தகுந்தபடியே அதற்கு வந்து வாய்த்துவிட்டது. அதுதான் எங்களுக்குப் பரம சந்தோஷமாக இருக்கிறது. சின்னவளுக்கு இடம் நிச்சயப்பட்டாலும் படாவிட்டாலும் பெரியவளுடைய கலியாணத்தை அதிசீக்கிரத்தில் முடித்து விட வேண்டும் என்று நாங்கள் நிரம்பவும் ஆவல் கொண்டிருக்கிறோம். ஏனென்றால், எங்களுக்கும் ஆண் துணை அத்தியாவசியமாக இருக்கிறது. அதோடு குழந்தை சரியான காலத்தில் புருஷனை அடைந்து சந்தோஷப்படுவதும் முதல் காரியம்' - என்றாள்.

அவ்வாறு தன்னைப் பற்றிப் பேச்சு நடப்பதை உணர்ந்த கோகிலாம்பாள் வெட்கமுற்றுத் தனது முகத்தை அப்பால் திருப்பிக் கொண்டாள்.