பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாயமான்

டைய நிலைமை எப்படியிருக்கிறதென்றால், இரண்டு கன்று களில் எதற்குப் பால் கொடுப்பது என்று இரங்கிப் பரிதவிக்கும், தாய்ப்பசுவின் நிலைமைபோல் இருக்கிறது. தங்களுடைய தமயனார் துன்பப்படுவதைப் பார்த்தால், அவருடைய பிரியப் படி செய்ய வேண்டும்போல இருக்கிறது. ஆனால், என்னுடைய மூத்த பெண்ணோ இந்த அம்மாளுடைய குமாரனைத்தான் கட்டிக்கொள்வேன் என்று ஒரே பிடிவாதமாகப் பேசுகிறாள். என்னுடைய மூத்த பெண்தான் இந்த ஆதீனத்துக்கே அதிகாரி யாக இருந்து எல்லாக் காரியங்களையும் நடத்தி வருபவள். அவளை நான் கேவலம் ஒரு குழந்தைபோல எண்ணி அதட்டி எந்தக் காரியத்தையும் செய்ய வற்புறுத்துவது ஒழுங்கு ஆகாது. தானாகக் கனியாத பழத்தைத் தடி கொண்டு அடித்துப் பழுக்க வைப்பது தகுதியான காரியமல்ல. ஆகையால், அவளுடைய கலி யான ஏற்பாட்டை மாற்ற எனக்கு அதிகாரமில்லை; என்னு டைய சின்னப் பெண்ணினிடத்திலும் நான் இந்த விஷயத்தைக் கலந்து யோசித்தேன். அவள் தங்களுடைய தமையனாரை அன் றைய தினம் பார்த்திருக்கிறதாகவும், அவரைக் கட்டிக்கொள்ளத் தனக்கு இஷ்டந்தான் என்றும் சொல்லுகிறாள்; ஆகையால், தாங்கள் தங்களுடைய தமையனாரிடத்தில் இங்கே இருக்கும் நிலைமையைத் தெரிவித்து அவருக்குச் சின்னப்பெண்ணைக் கட்டிக்கொள்ள இஷ்டமிருக்கும் பட்சத்தில், அதை எங்களுக்குத் தெரிவியுங்கள். அதன் மேல் நாங்கள் தங்களுடைய ஜாகைக்கு வந்து எல்லா விஷயங்களையும் பார்த்துத் திருப்தி கொண்டு, அந்தக் கலியாணத்தையும் இந்த முகூர்த்தத் தேதியில் நடத்தி விடுவோம். அவ்வளவுதான் முடிவு. ஏதடா இவ்வளவு கண்டிப் பாகப் பேசுகிறார்களே என்று தாங்கள் என்மேல் ஆபாசப் படக்கூடாது' என்று நயமாகக் கூறினாள்.

அதைக்கேட்ட புஷ்பாவதியின் முகம் வாட்டம் அடைந்தது. தான் அதற்குமேல் அவர்களை எப்படி வற்புறுத்துவது என்பதை அறியாதவளாய்ச் சிறிது நேரம் தயங்கிய பின் பூஞ்சோலையம் மாளை நோக்கி, ‘சரி; மேலும் நான் என்ன சொல்லப் போகிறேன். தாங்கள் சொன்னபடி நான் போய் என்னுடைய தமயனாரிடத்தில் இந்த விஷயங்களையெல்லாம் தெரிவித்து, செ.கோ.1-11