பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

செளந்தர கோகிலம்



அவர் என்ன சொல்லுகிறார் என்பதைக் கேட்டு முடிவைத் தங்களுக்கு எழுதியனுப்புகிறேன். தாங்களும் இன்னும் யோசனை செய்து இந்த ஏற்பாட்டை எங்களுடைய பிரியப்படி மாற்ற முடியுமா என்று பாருங்கள். என்னுடைய தமையனார் இருக்கும் பரிதாபகரமான நிலைமையைத் தாங்களே நேரில் வந்து பார்த்தால், தங்களுடைய மனசு உடனே இளகிப் போய் விடும், அவர் அவ்வளவு கேவலமான நிலைமையில் கிடக்கிறார். நான் உத்தரவு வாங்கிக் கொள்ளுகிறன். தயவிருக்கட்டும்” என்று கூறி விடை பெற்றுக்கொள்ள, உடனே புஷ்பாவதிக்குத் தாம்பூலம், மஞ்சள், குங்குமம், இரவிக்கைத் துண்டு முதலியவை கள் வழங்கி மரியாதைகள் செய்யப்பட்டன. அதற்கு மேல் புஷ்பாவதி அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டு வெளியில் போய் தனது வீடு இருந்த திக்கில் போகாமல், கண்ணபிரானது வீடு இருந்த திக்கை நோக்கிச் சென்றாள்.