பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோகனாஸ்திரப் பிரயோகம் 153

அதைக் கேட்டுக் கொண்டே இருந்த பூஞ்சோலையம்மாளது முகம் சூரியனைக் கண்டு மலரும் தாமரைபோல அளவிறந்த சந்தோஷத்தினால் மலர்ந்து இன்பமயமாகத் தோன்றியது. அவர்கள் இருவரும் ஆநந்தபரவசம் அடைந்து பூரித்தவர்களாய், இரண்டோரு நிமிஷ நேரம் மெளனப் பேரானந்தத்தில் ஆழ்ந்திருந்தனர். அதற்குள் கோகிலாம்பாளது மனதில் தாங்கள் என்ன செய்வது என்பதைப் பற்றிய முடிவு ஏற்பட்டு விட்டது. அவள் உடனே தனது தாயை நோக்கி, 'அம்மா! எனக்கு இப் போது ஒரே ஒரு விஷயந்தான் மிகுந்த சந்தோஷத்தை உண் டாக்குகிறது; ஒரே பிடிவாதமாகப் படுத்திருக்கும் நம்முடைய செளந்தரவல்லிக்கும் நாம் இந்தக் கடிதத்தைக் காட்டி அவளுக்குத் தேறுதல் சொல்லி, அவளைச் சந்தோஷமாக இருக்கும் படி செய்ய இது ஒரு நல்ல சாதனமாக ஏற்பட்டது. அவர்கள் செளந்தரவல்லியைக் கலியாணம் செய்து கொள்ளத் தங்களுக்கு விருப்பமில்லை என்று எழுதியிருப்பார்களானால், இவள் அமர்க்களப்படுத்தி விடுவாள்; என்னுடைய கலியாணம் கூட ஒழுங்காகவும், சந்தோஷகரமாகவும் நடைபெறாமல் அடித்து விடுவாள். ஆகையால், இந்தக் கடிதம் நமக்கு நிரம்பவும் அநுகூலமானதாகவே இருக்கிறது. நாம் இப்போது அவளிடத்தில் போய் இதைக் காட்டி, அவளைச் சந்தோஷப்படுத்துவோம். ஆனால், அவள் தன்னுடைய கலியாணத்தைப் பின்னாலும், என் னுடைய கலியானத்தை முன்னாலும் வைத்துக் கொள்வதைப் பற்றி ஏதாவது ஆட்சேபணை சொல்லி, மறுபடியும் இடக்கு பண்ணுவாள். இவர்களுக்கு நாம் ஏற்கனவே லக்னப் பத்திரிகை கொடுத்து விட்டோம். ஆகையால், நாம் எப்பாடுபட்டாவது நாம் செய்த வாக்குறுதியை நிறைவேற்றியே தீர வேண்டும். அதோடு இதில் இன்னொரு முக்கியமான சங்கதி இருக்கிறது. நான் வாழ்க்கைப்படப் போகும் இடமோ நிரம்பவும் ஏழ்மை யான இடம்; அவள் வாழ்க்கைப் படப் போகும் இடமோ நிரம்பவும் மேம்பட்ட இடம். இந்த இரண்டு கலியாணங்களும் ஒன்றாக நடந்தால், இங்கே வந்து கூடும் ஜனங்கள் இரண்டு இடங்களுக்கும் உள்ள தாரதம்மியத்தைக் கண்டு என்னைப் பற்றியும், என்னுடைய மாமியார், அவர்களுடைய குமாரர் முதலியோரைப் பற்றியும் இளக்காரமாகவும், புரளியாகவும் பேச