பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

செளந்தர கோகிலம்



இருநூறு ஜவான்களோடு வந்து இவரை எப்படியும் பிடித்துக் கொண்டு போய்விடுவார். நீங்கள் தடுப்பதனால், எங்களுடைய உத்தியோகம் போவதுதான் மிச்சமேயன்றி, இவர் மிஞ்சப் போகிறதில்லை. இவர் இப்போது வராவிட்டால் இன்னும் கொஞ்ச நேரத்தில் எப்படியும் ஜெயிலுக்கு வந்துதான் தீர வேண்டும்; ஆகையால், நீங்கள் பதறுவதில் உபயோகமே இல்லை. தூர நில்லுங்கள் வந்து நெருக்க வேண்டாம்' என்று நயமாகவும் பயமுறுத்தியும் பேசினார்.

அதைக்கேட்ட கோவிந்தபுரம் இளைய ஜெமீந்தாரான சுந்தரமூர்த்தி முதலியார் மிகவும் ஆத்திரத்தோடு தாண்டிக் குதித்து போலீஸ் இன்ஸ்பெக்டரை நோக்கி நிரம்பவும் அலட்சிய மாகவும், இழிவாகவும் பேசத் தொடங்கி, 'உம்முடைய போலீஸ் பெருமையெல்லாம் எங்களுக்கு நன்றாகத் தெரியும். ஐயா அதிகமாக அளக்க வேண்டாம். நான் ஒரு குற்றமும் செய் யவில்லையே; என்னை ஏன் பிடித்துக்கொண்டு போகிறீர்கள் என்று இந்தக் கண்ணபிரான் முதலியார் கேட்டாரே. அதற்கு நீர் சரியான ஜெவாப்பு சொல்லாமல், இவரைத் தொட உமக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? இந்த வாரண்டு வேறே யாரோ ஒரு கண்ணபிரான் முதலியாருக்கு வந்திருக்க வேண்டுமேயன்றி இவருக்கு ஒரு நாளும் வந்திருக்காது. இவர் மனசால்கூட எவருக்கும் பொல்லாங்கு நினைக்காத ஸாதுவான மனிதர். நீங்கள் ஆள் மாறாட்டமாக இவரைப் பிடிக்கிறீர்கள். இதனால் நீங்கள் பெருத்த இடரில் மாட்டிக் கொள்ளப் போகிறீர்கள். கடைசியில் நீங்கள் பிரமாதமான கஷ்டத்துக்கும், பண நஷ்டத்துக்கும் ஈடு செய்ய நேரிடும். ஜாக்கிரதை சரியான ஆளைப் பார்த்துப் பிடியுங்கள். உங்களுடைய அதிகாரப் பெருமை யைப் பற்றி ஒன்றரை மைல் நீளம் அளப்பதில் என்ன உப யோகம்? நீங்களெல்லாம் புலிகள்தான் என்பது எல்லோருக்கும் தெரியும். உண்மையில் குற்றம் செய்த ஆடுகளுடைய கண்ணுக்கு நீங்கள் புலிகளாகத் தோன்றலாம். குற்றமற்ற யோக்கியமான மனிதர்கள் உங்களை எலிகளுக்குச் சமமாகக்கூட மதிக்க மாட்டார்கள்' என்று நிரம்பவும் முறுக்காகவும் அமர்த்தலாகவும் பேசினார்.