பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோகனாஸ்திரப் பிரயோகம் 205

அதைக்கேட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் மிகுந்த கிலேகத் தோடு புன்னகை செய்தவராய், சுந்தரமூர்த்தி முதலியாரைப் பார்த்து, “எங்களை நீங்களெல்லோரும் புலிகளாக நினைத்துக் கொண்டாலும் சரி, எலிகளாக நினைத்துக் கொண்டாலும், அதைவிட இன்னமும் கேவலமான ஈ, கொசு முதலிய அற்ப ஜெந்துக்களாகவாவது, வேறே எப்படியாகவாவது எண்ணிக் கொள்ளலாம். நீங்கள் எங்களைத் துஷித்துத் தடுப்பது எய்தவன் இருக்க, அம்பை தொந்து கொள்வதுபோல் இருக்கிறது, நாங்கள் ஆள்மாறாட்டமாக இவரைப் பிடிக்கிறோம் என்று நீர் சொல்வது தவறு. இவருடைய பெயர் கண்ணபிரான் முதலியார். இவருடைய தாயின் பெயர் கற்பகவல்லியம்மாள். அவருடைய தகப்பனாரான அமிர்தலிங்க முதலியார் இறந்து போய்விட்டார். இவர்கள் இந்தப் பங்களாவுக்குப் பக்கத்திலுள்ள 515-வது லக்கமுள்ள வீட்டில் குடியிருக்கிறவர்கள். இவருக்கு ரெவினியு போர்டாபீஸில் குமாஸ்தா உத்தியோகம். இவருக்கு வயது இருபத்திரண்டு. இந்த விவரங்களுடையவரையே பிடிக்கும் படியாக வாரண்டு வந்திருக்கிறது. இந்த விவரங்கள் இவருக்குப் பொருத்தமானதாக இல்லாதிருந்தால், இவர் மாஜிஸ்டிரேட்டி னிடத்தில் சொல்லி விடுதலைப் பெற்றுக் கொண்டு வந்து விடட்டும். எங்களுக்கு இவர்மேல் என்ன பகைமை இருக்கிறது? ஒன்றுமில்லை. இதை நாங்கள் வேண்டுமென்று செய்யவில்லை; தயவு செய்து எல்லோரும் நகர்ந்து கொஞ்சம் வழிவிடுங்கள். நாங்கள் இவரை அழைத்துக்கொண்டு போகிறோம்; நேர மாகிறது" என்று வற்புறுத்திக் கூற, அவருக்குத் துணையாக வந்தி ருந்த ஜெவான்கள் ஜனங்களை விலக்கி வழிசெய்யத் துவங்கினர். அந்தச் சமயத்தில் அந்தக் கும்பலில் இன்னொரு பக்கமாக வழி செய்து கொண்டு கற்பகவல்லியம்மாளும், பூஞ்சோலையம் மாளும், புஷ்பாவதியும் வேறு சுமார் இருபது ஸ்திரிகளும் போலீ சார் நின்ற இடத்திற்கு வந்து சேர்ந்தனர். கலியாணக் கோலத் தோடு கைவிலங்கு பூட்டப்பெற்றவனாய் வெட்கித்தலைகுனிந்து குன்றிப் போயிருந்த கண்ணபிரானைக் காண, அவர்களது மனம் கொதித்தது. தேகம் துடி துடித்தது. முதலில் வந்த கற்பகவல்லி யம்மாள் அடக்கிய கோபத்தோடு மரியாதையாக இன்ஸ்பெக் டரைப் பார்த்து, “ஏன் ஐயா! என்னுடைய பிள்ளைக்கு