பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206

செளந்தர கோகிலம்



விலங்குமாட்டி இப்படி அவமானப்படுத்துகிறீர்கள்? இவன் ஒரு பாவத்தையும் அறியாத பரம ஸாதுக் குழந்தையாயிற்றே! இவனை இப்படிப்பட்ட அக்கிர்மக் கோலத்துக்கு ஆளாக்குவது தெய்வத்துக்குச் சம்மதமாகுமா? உங்களுக்கெல்லாம் பெண் டாட்டி பிள்ளைகள் ஒருத்தரும் இல்லையா? கலியாணக் கோலத் தோடு ஒரு சுபகாரியம் செய்து கொள்ளத் தயாராக இருக்கும் குழந்தையை நீங்கள் இப்படிப் பிடித்து விலங்கிட்டுக் கொண்டு போக அவன் அப்படி என்ன குற்றமய்யா செய்து விட்டான்? முதலில் விலங்கை எடுங்கள். திருடனுக்கும் கொலைகாரனுக்கும் அல்லவா விலங்கு போடுகிறது' என்று அழுத்தமாகவும், துணிவாகவும் கூறினாள். அவளது பரிதாபகரமான தோற்றத்தைக் கண்டு அவள் கூறிய வார்த்தைகளைக் கேட்ட ஜனங்களெல் லாரும் பதறினார்கள். எல்லோரது மனதும் கண்களும் கலங்கின. கண்களில் கண்ணிர் துளித்து நின்றது. அந்தப் பெண்பிள்ளை களைப் பார்த்து ஒரு வார்த்தை சொல்லிவிட்டால், அத்தனை ஜனங்களும் கூடி அந்தப் போலீசார் ஐவரையும் கசக்கிச் சாறு பிழிந்து, அவ்விடத்திலேயே குழிவெட்டிப் புதைத்துவிடக் கூடியவர்களாய் அவர்களது நோக்கத்தைக் கவனித்தவர்களாய்ப் பதறி நின்றனர்.

அப்போது இன்ஸ்பெக்டர் பராங்குசம் பிள்ளை ஜெகஜ் ஜோதியாய் அலங்கரித்துக் கொண்டிருந்த அந்த ஸ்திரீகளை எல்லாம் ஏறிட்டுப் பார்த்தார். பெரிய மனிதரது வீட்டு ஸ்திரீகளான அத்தனை பேரையும் பார்த்து மிகுந்த பிரமிப்பும், கலக்கமும், சஞ்சலமும், கிலேசமுமடைந்த இன்ஸ்பெக்டர் சிறிது நேரம் தயங்கினார். அந்தக் கும்பலில் நின்று கொண்டிருந்த புஷ்பாவதி முதலிய யெளவன மடந்தையராக அதிசுந்தர ரூபிணிகள் பலரைக் கண்டவுடன் அவரது மனம் மிகுந்த இரக்க மும், நெகிழ்வும் கொண்டு ஆனந்த பரவசம் அடைந்தது. தமக்கு அதனால் என்ன துன்பம் நேரிட்டாலும், நேரிடட்டும் என்று தாம் உடனே கண்ணபிரானை விட்டு விட்டால், அந்த யெளவன ஸ்திரீகளெல்லாரும் தம்மை நல்லவர் என்று கொண்டாடி தம்மீது பிரியம் கொள்வார்கள் என்ற எண்ணம் அவரது மனதில் தோன்றியது. பெண்ணென்றால் பேய் கூட இரங்குமானாலும், பெரும் பேயான போலீசார் மாத்திரம் இரங்கவே மாட்டார்க