பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

செளந்தர கோகிலம்



உடம்பும் ஒரு சானுக்குக் குன்றிப்போயிற்று. தான் அந்த இடத் திலேயே நாக்கைப் பிடுங்கிக்கொண்டு பிராணனை விட்டுவிட லாம் என நினைவு அவளது மனதில் எழுந்து எழுந்து தலை காட்டியது. அவ்வாறு விவரிக்கவொண்ணாத பரம சங்கடமான நிலைமையில், பூஞ்சோலையம்மாள் தத்தளித்திருந்தாள்.

கடைசியாக கற்பகவல்லியம்மாள் இன்ஸ்பெக்டரை நோக்கி, “நீர்தான் அந்தத் திருட்டை நடத்தியிருக்கக் கூடாதா? நீர்தான் திருடிவிட்டு அபாண்டமாக எங்கள் பேரில் சுமத்துகிறீர் என்று நாங்கள் சொல்லுகிறோம்” என்று கூறியதைக் கேட்ட இன்ஸ்பெக்டர் நிரம்பவும் இறுமாப்பாக நகைத்து கற்பகவல்லி யம்மாளை நோக்கி, ‘சரி அப்படியே நினைத்துக் கொள்ளுங்கள்; உங்களை யாராவது தடுக்க முடியுமா? ஆனால் நீங்கள் மனசுக் குள் நினைத்துக் கொண்டிருப்பதில் என்ன உபயோகம்? நீங்கள் போய் மாஜிஸ்டிரேட்டினிடத்தில் இப்படிச்சொல்லி, என் பேரில் வாரண்டு வாங்கிக் கொண்டு வந்து விலங்கு போட்டு என்னைப் பிடித்துக் கொண்டு போய் ஜெயிலில் அடையுங்கள். அப்போது இந்தக் கண்ணபிரான் முதலியாரை அழைத்துக்கொண்டு வந்து விடலாம். அப்படி நீங்கள் செய்கிறவரையில், நான் இவரை விடாமல் பிடித்துக்கொண்டுதான் போக வேண்டும். ஆனால் நீங்கள் நினைக்கிறபடி, இது மொட்டைத் தலைக்கும் முழங் காலுக்கும் முடிச்சுபோட்ட சங்கதியல்ல. அப்படி சுத்தமாக சம்பந்தப்படாத மனிதரைப் பிடிக்க வாரண்டு கேட்டால், மாஜிஸ்டிரேட்டு கொடுக்க, சட்டம் இடம் கொடுக்கவில்லை. சரியானபடி தடயமாவது அநுமானமாவது, சாட்சியாவது இருந் தால் அன்றி, வாரண்டு பிறப்பிக்கப்பட மாட்டாது' என்றார்.

அதைக்கேட்ட கற்பகவல்லியம்மாள் முன்னிலும் அதிக ஆத்திரமும், பதைபதைப்பும் கட்டிலடங்கா ஆவேசமும் அடைந் தவளாய், "என்னுடைய பிள்ளையின்பேரில் வாரண்டு பிறப் பிக்க, என்ன அநுமானமய்யா ஏற்பட்டது? தெய்வமே என்று அடைத்துக்கொண்டு நாங்கள் எங்களுடைய வீட்டில் கிடக்கி றோம். இது பெருத்த இடியாக விழுந்து விட்டதே! ஏழைகளு டைய வயிறு எரியும்படி செய்வீர்களானால், நீங்கள் எல்லோரும் பெண்டாட்டி பிள்ளைகளோடு அதிக நாளைக்கு வாழ மாட்டீர்கள்” என்று தாறுமாறாகப் பேசத் தொடங்கினாள்.