பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விநோதத் திருட்டு 5

ஜனங்களுக்கு முப்பதாயிரம் பேர் அயோக்கியர்கள் இருக்கி றார்கள். கணக்கு சரியாகத்தானே போகிறது; வெளியூர்களில் மனிதர்கள் தூங்கிக் கொண்டிருக்கும் ராத்திரி காலங்களில் கன்னக்களவும், வழிப்பறியும், மாடு பிடியும் நடந்தால், இங்கே பகற்காலங்களில் விழித்திருக்கும் போதே ஒருவரையொருவர் ஏமாற்றுகிறார்கள். எது ஆண்மைத்தனமான திருட்டு? ஆனால் இந்த விஷயங்களை எல்லாம் உடனுக்குடனே பகிரங்கப்படுத்த வெளியூர்களில் பத்திரிகைகள் இல்லை; இந்த ஊரிலிருந்து வெளியாகும் பத்திரிகைகள் இடத்தை நிரப்புவதற்காக, இந்த விஷயங்களை எல்லாம் உடனுக்குடனே அச்சடித்து வெளிப் படுத்தி விடுகின்றன. அவ்வளவுதான் வித்தியாசம். அதனாலே தான் இந்த ஊருக்கு இவ்வளவு கீர்த்திப்பிரதாபம் ஏற்பட்டிருக் கிறது” என்று கூறினார்.

அப்போது, அவர்களுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த ஒரு செட்டியார் புன்சிரிப்போடு நாயுடுவை நோக்கி, "ஐயோ நாயுடுகாரு! யாரோ அயோக்கியர்கள் என்னவோ காரியம் செய்துவிட்டால், அதைப்பற்றி நீங்கள் ஏன் சண்டைபோட்டுக் கொள்ளுகிறீர்கள்? அதோடு விடுங்கள். சைனாபஜார் தெருவில் ஏதோ திருட்டு நடந்ததாகப் பேசிக் கொண்டீர்களே அதன் விவரம் என்ன? நான் ஒரு வேலையாக சைதாப்பேட்டைக்குப் போய்விட்டு இப்போதுதான் வருகிறேன். எங்கே பார்த்தாலும் ஜனங்கள் கூடிக்கூடி நின்று இதே பேச்சாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். விஷயம் இன்னதென்பது எனக்கு விளங்கவில்லை” என்றார். -

உடனே நாயுடு சாந்தமடைந்தவராய் செட்டியாரைப் பார்த்து, 'அந்த வேடிக்கையை என்னவென்று சொல்லுகிறது! அடடா திருடர்கள் எப்படிப்பட்ட அதிசயமான தந்திரம் செய் திருக்கிறார்கள் தெரியுமா! நினைக்க நினைக்க மகா ஆச்சரியமாக இருக்கிறது! சைனாபஜாரிலும் அதற்குப் பக்கத்திலுள்ள செளகார்பேட்டையிலும் கோடீஸ்வரர்களான எத்தனையோ வியாபாரிகளும் முதலாளிகளும் இருக்கிறார்கள். அந்த இடத்துக்குக் காலை எட்டு மணிக்கு ஒரு தபாற்காரன் வருகிறது வழக்கம்; அவன் கொண்டுவரும் மணியார்டர் தொகை மாத்திரம் ஒரு சுமார் இருபதினாயிரம் ரூபாய் இருக்கும், அது