பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோசம் நாசம் கம்பளி வேஷம் 219

உறுதியைக் கொண்டவனாய்த் தன்னைத்தானே வெறுத்து வைது கொண்டான். பரம ஏழையாகிய தான் தனது நிலைமைக்குத் தகுந்த இடத்தை நாடாமல், பெருத்த கோடீசுவரன் ஆகவும், சகலமான நற்குணங்களும், சுந்தரமும் வாய்ந்த மங்கையர்க் கரசியான ஒரு பெண்ணை மணக்கவும் விரும்பியது தவறு என்பதும், தனக்கு அதனால், தனது பூர்விகமான நிலைமையும், கண்ணியமும், உத்தியோகமும் போய், எல்லோராலும் பழிக்கத் தகுந்த மகா இழிவான நிலைமை வந்து வாய்த்தது என்பதும் அவனது மனத்தில் உறைத்து வாள் கொண்டு அறுப்பதுபோல அறுத்துக் கொண்டிருந்தன. தான் பரம தரித்திரனாகவே இருக்கப் பிறந்தவன் என்பதும், தான் கோகிலாம்பாளிற்கு அருகில் நெருங்கும்போதே அவளுக்குப் பலவகையான இடர்களும், அவமானங்களும் சம்பவிக்கின்றன என்பதும் நிச்சயமாக அவனது மனதில் பட்டன. ஒவ்வொரு நாளும் வழக்கமாகக் கடற் கரைக்குப் போய்க் காற்று வாங்கி விட்டு வருகிறவளான அந்தப் பெண்மணியின் சாரட்டுக்கருகில் தான் சென்ற காரணத்தி னாலேயே அவளுக்கு மோட்டார் வண்டியினால் பிரான அபாயமான விபத்து நேர்ந்தது என அவனது மனம் இடித்து இடித்துக் கூறியது. அதுபோலவே, பூஞ்சோலையில் தனியாக உட்கார்ந்திருந்த அந்த நங்கையினிடத்தில் தான் அணுகிச் சென்றதனாலேயே அவளுக்கு நாகப்பாம்பின் விபத்தும், அவளது தங்கையான செளந்தரவல்லியினால் இழிவும், அவமானமும் நேர்ந்தன என்றும், கடைசியில் அவள் தனக்கு மனையாட்டி யாவதற்குப் பூர்வ பீடிகையாக நலங்கு வைக்கப்படும் மங்கள கரமான கோலத்தில் இருக்கையில், தன்னையே போலீசார் அபாண்டமான பழிக்கு ஆளாக்கிப் பிடித்து வந்ததனால், அவளது நிலைமை விவரிக்க இயலாத துன்பமும், அவமானமும் நிறைந்ததாக மாறிப்போனது என்றும் கண்ணபிரான் எண்ணி எண்ணி ஏங்கிப் பாகாய் உருகி ஒடிக்கொண்டிருந்தான். தனக்கும், கோகிலாம்பாளுக்கும் நட்பு ஏற்படுவதற்குள் குறுக் கிட்ட அந்த நான்கு இடையூறுகளும், நான்கு பெருத்த அபசகு னங்கள் போலவும், அந்த இடம் தனக்குக் கிடைக்கக் கூடிய தல்லவென்று தடுப்பது போலவும் விளங்கின. அத்தனை இடர் களுக்கும் வேதனைகளுக்கும் இடையில் ஒரே ஒரு விஷயம்