பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

செளந்தர கோகிலம்



புரசைபாக்கத்துக்குப் போகிற ஜெவான் இந்நேரம், அந்தப் பங்களாவுக்குப் போயிருப்பான். இன்னும் அரை நாழிகையில் உம்முடைய தாயார் வந்து விடுவார்கள்; அதிருக்கட்டும்; நீர் சரியாகச் சாப்பிட்டீரா? ஜெவான்கள் நல்ல சாப்பாடாகக் கொண்டு வந்தார்களா?” என்றார்.

கண்ணபிரான்:- ஆகா! சாப்பாடு நன்றாகத்தான் இருந்தது. ஆனால், என்னுடைய மன வியாகுலத்தில் ஆகாரமே பிடிக்க வில்லை. தங்களுடைய பேச்சைத் தள்ளக்கூடாது என்று கஷ்டப் பட்டுக் கொஞ்சம் சாப்பிட்டேன்.

இன்ஸ்பெக்டர் :- சரி, அதுவே போதும், எப்படியாவது இந்த ராத்திரிப் பொழுது கழியுமானால், நாளைய தினம் நீர் உம்முடைய வீட்டுக்குப் போய்ச் சேர்ந்து விடுகிறீர்; அதன் பிறகு திருப்தியாகச் சாப்பிட்டுக் கொள்ளுமேன்? அதிருக்கட்டும். எனக்கு ஒரு சந்தேகம் இருந்து வருகிறது. அதை உம்மிடத்தில் கேட்க வேண்டுமென்பது. நீங்கள் சாதாரணமான ஏழைக் குடும்பத்தார் என்று நான் கேள்வியுற்றேன். இந்த ராஜரத்தின முதலியாருடைய வீட்டாரோ கோடீசுவரர்கள்; அவர்கள் உமக்குப் பெண் கொடுக்க சம்மதித்தார்களே. உங்களுக்கும் அவர்களுக்கும் இதற்கு முன் ஏதாவது பாந்தவ்வியம் உண்டா? அல்லது, அவர்களுக்கும் உங்களுக்கும் நெங்காலப் பழக்கம் உண்டா? உமக்கு அந்த வீட்டார் பெண் கொடுப்பதாக ஒப்புக் கொண்டார்களே, உங்கள் இருவருக்கும் எப்படிப் பழக்கம் உண்டாயிற்று?

கண்ணபிரான்:- எங்களுக்கும் அவர்களுக்கும் எவ்வித பாந்தவ்வியம் இல்லை, எங்களுக்கும் அவர்களுக்கும் இதுவரை யில் பழக்கங்கூடக் கொஞ்சமும் இல்லை. அவர்களுடைய வீட்டில் ஆண்பிள்ளைகளே இல்லை. தாயாரும் இரண்டு. பெண்களுமே இவ்வளவு சொத்துக்களுக்கும் சொந்தமானவர்கள். பெண்களைத் தங்களுக்குச் சரிசமானமான பணக்காரர்களுடைய வீட்டில் கொடுத்தால் இவர்களுடைய பங்களா முதலிய சகலமான சொத்துக்களையும் இரண்டு பெண்களும் பாகம் பிரித்துக் கொண்டு தன் தன் புருஷன் வீட்டுக்குப் போக நேர்ந்து விடும் என்ற எண்ணத்தினால், துபாஷ் முதலியாருடைய