பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விதைக் கோட்டைக்குள் எலி 25.4

பாராத பெருத்த பேரிடியையும் அவமானத்தையும் கண்டு சகிக்க வொண்ணாத துயரங்கொண்டு தத்தளித்து மயங்கி மூர்ச்சித்துக் கீழே வீழ்ந்த கோகிலாம்பாளை, பூஞ்சோலையம்மாள் முதலிய பெண்டீர் எடுத்து ஒரு சாய்மான நாற்காலியில் வைத்து, உடனே அவளது அந்தப்புரத்திற்குக் கொண்டுபோய் அவ்விடத்திலிருந்த அவளது கட்டிலின்மீது படுக்க வைத்து அவளது மயக்கத்தைத் தெளிவிப்பதற்குத் தேவையான பற்பல சிகிச்சைகளைச் செய்தனர். சிலர் விசிறிகொண்டு வீசினர், சிலர் தண்ணிரை வாய்க்குள் வார்த்தனர். வேறு சிலர் ஈரத்துணியைக்கொணர்ந்து முகத்தைத் துடைத்தனர். மற்றும் சிலர் அவளது அழகு வழிந்த மேனியை அலங்கரித்துக்கொண்டு அவளுக்கு இடையூறாக இருந்த ஆடை ஆபரணங்களை எல்லாம் விலக்கிப் பூஞ்சோலை அம்மாளிடத்தில் கொடுத்தனர். பூஞ்சோலையம்மாளும் தனது புத்திரியின் மனக்கோலம் அவ்வாறு அவமானக்கோலமாக முடிந்ததையும், தனது புத்திரியால் கரை கடந்து காதலிக்கப்பட்ட வடிவழகனான கண்ணபிரான் சிறைப்படுத்தப் பட்டதையும் கண்டு, சகிக்க இயலாத துயரமும், வெட்கமும், அவமானமும் அடைந்தவளாய் அங்கிருந்தோரது முகத்தைப் பார்க்கவும் அவர்களோடு பேசவும் வெட்கிக் குன்றியிருந்தாள். ஆனாலும், தனது அருமைப் புதல்வியான கோகிலாம்பாள் ஒருகால் இறந்துபோய்விடுவாளோ என்ற திகிலும் கவலையும் கொண் டவளாய், அவளைக் காப்பாற்ற முயல்வதிலேயே தனது முழுக் கவனத்தையும் செலுத்தியவளாக நிரம்பவும் பதை பதைத்துத் தவித்துக்கொண்டிருந்தாள்.

கண்ணபிரான்து தாயான கற்பகவல்லியம்மாளது நிலை மையே, மற்றவர்களது நிலைமையைவிட ஆயிரமங்கு பரிதாபகர மாகவும், கண்டு சகிக்க அசாத்தியமானதாகவும் இருந்தது. அந்த அம்மாள் கடைசியாகப் போலீசாரை விடாமல் நிறுத்திக் கண்ணபிரானைத் தாங்களே கொணர்ந்து கச்சேரியில் ஆஜர் படுத்துவதாகக்கூறி அவர்களை வழிமறித்தும், அவர்கள் கண்ண பிரானை அழைத்துக்கொண்டு போனதைக் கண்டு அந்த அம்மாள் சகியாமல் லபோ லபோவென்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு கீழே விழுந்து பலவாறு பிரலாபித்துப் புரண்டு அழுதாள். கோகிலாம்பாள் மூர்ச்சித்துக் கீழே விழுந்