பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விதைக் கோட்டைக்குள் எலி 279

போகிறார் என்பதைக் கவனித்துக் கொண்டு மெளனமாக நின்றனர்.

மற்றவர்களைப் போலவே அபாரமான வியப்பும், திகைப்பும், கொதிப்பும், கோபமும் அடைந்து பதறி நின்ற சுந்தரமூர்த்தி முதலியார் மறுபடி அந்தத் துருக்கனை நோக்கி, 'அடேய் சாயப்பு: இதென்ன குடிவெறியின் கோளாறா? யாரைப் பார்த்து நீ இப்படிப்பட்ட வார்த்தைகள் சொல்லு, கிறாய்? இதென்ன சோம்பேறி மடமென்று பார்த்துக் கொண் டாயா? அல்லது இங்கே இருக்கிறவர்கள் எல்லோரும் தாசிகள் என்று நினைத்துக் கொண்டாயா மரியாதையாக நீ உன்னு டைய சிநேகிதர்களை அழைத்துக்கொண்டு வெளியில் போகி றாயா? இல்லாவிட்டால், நல்ல உடம்பை வீணாகக் கெடுத்துக் கொள்ள போகிறாயா? நீ யாருடைய தூண்டுதலின்மேல் இப் படிப் பேசுகிறாய் என்பது எங்களுக்குத் தெரியும். அவர்களுக்குத் தகுந்த மரியாதை நடத்தவும் எங்களுக்குத் தெரியும். இதெல்லாம் அந்தப் போலீசாருடைய கைவரிசை என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். அவர்களை நான் பார்த்துக் கொள்ளுகிற இடத்தில் பார்த்துக் கொள்ளுகிறேன். நீங்கள் முதலில் வெளியில் போங்கள்' என்று அதட்டிக்கூற, அதைக்கேட்ட பாச்சாமியான், 'ஏழைமேலே எசமான் கோபிச்சிக்கக்கூடாது. போலீசாருக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லீங்க, நம்பகிட்ட இந்தப் பொம்புளெ ரொம்ப நாளாகக் கூத்தியாளா இருந்தான்னு ருசுப்படுத்தறேன்! போன வருஷத்துலே புள்ளெகூட வந்துடிச்சு. அதுக்கு நம்பதான் மருந்து குடுத்து அதெத்தொலைச்சாங்கோ, அப்ப இவ சாவக்கெடந்தா இவளெ நம்ப வண்டியிலே வச்சு கோஷா ஆசுபத்திரிக்கு இட்டுக்கினு போயி வைத்தியம் பார்த்துக் காப்பாத்தினாங்கோ அந்த ஆசுபத்திரிக் கணக்குலேகூட இவளோடெ கருப்பம் அகாலத்துலே வெளிப்பட்டுப்போன சீக் குன்னு பதிவாயிருக்குது; எசமானே போயி வெசாரிச்சுக்கலாம்; இவளுக்காவ நாம் இத்தினி வருசகாலம் எம்பிட்டுப் பாடுபட்டு எம்பிட்டுப்பணம் தொலைச்சிருக்கறாங்கோ தெரியுமா இப்ப இவ. குந்தினாப்பலே இங்ங்னே வந்து நொளெஞ்சுக்கினு ஏமாத் திப்புடப் பார்க்கறாளோ! நானா உட்றவன்! அவளுக்காச்சு எனக்காச்சு ஒரு கை பார்த்துத்தான் உடப்போறேன்” என்று கூறித் தனது மீசைகளை முறுக்கிவிட்டான்.