பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

செளந்தர கோகிலம்



யான திருட்டாக இருக்கிறதே! இந்தக் கலிகாலத்தில் மனித னுடைய புத்தி என்னென்ன அபூர்வமான வழிகளில் வேலை செய்கிறது பார்த்தீர்களா இவ்வளவு ஜனக்கூட்டமுள்ள இடத் தில் தபாற்காரனுக்கு எப்படிப்பட்ட அபாயம் நேர்ந்துவிட்டது பார்த்தீர்களா தபால் இலாகாதார்கள் ஜனங்களுடைய நன்மைக்காக எவ்வளவோ செளகரியங்களைச் செய்திருக்கிறார் கள். சில திருட்டு நாய்கள் இப்படிச் செய்வதனால், இனிமேல், பொது ஜனங்களுக்குத்தான் அசெளகரியம் உண்டாகிவிடப் போகிறது. எல்லோரும் இனிமேல் தபாற்சாலைக்குப் போய் மணியார்டர் முதலியவைகளை வாங்கிக் கொள்ளவேண்டும் என்று செய்துவிடப் போகிறார்கள். அப்புறம் நாமெல்லோரும் அங்கே போய்த் தொண்ணாந்து நிற்க வேண்டியதுதான்' என்றார். રુ

அந்தச் சமயத்தில் முதலியாரது சுருட்டு அடிவரையில் எரிந்து சொற்பமே மிகுதி இருந்தது. ஆகையால், அது அவரது உதட்டைச் சுட்டுவிட்டது. அந்த ஆத்திரத்தினாலும், நாயுடுவின் மீது அவர் கொண்ட கோபம் அப்போதும் அடங்காது இருந்த மையாலும், முதலியார் தமது முகத்தைச் சுளித்துக் கொண்டு ஆத்திரமாகப் பேசத் தொடங்கி, ஜனங்கள் எல்லோரும் தபாற் சாலைக்குப் போக முடியுமோ அந்தத் தபாற்காரன் முட்டாள் காரியம் செய்து விட்டால், அதற்காக ஜனங்களுக்குத் தண்டனையோ தபாற்சேவகன் ஏனைய்யா இரண்டாவது கட்டுக்குள் போனான்? அவ்வளவு அதிகமான பணத் தொகையை வைத்திருப்பவன் ஜாக்கிரதையாக வெளியிலே யல்லவா இருக்க வேண்டும். அதைவிட்டு அவன் ஏன் உள்ளே ஓடினான்? பெரிய மனிதனுக்கு உள்ளே கொண்டுபோய்க் கொடுத்தால், இரண்டனா, ஒரனா பிச்சைக்காசு கிடைக்கு மென்று தபாற்காரன் உள்ளே போனான். திருடன் நன்றாக ஏமாற்றினான் என்றார்.

உடனே நாயுடு செட்டியாரைப் பார்த்து, "எவன் ஏமாறினால் என்ன? மணியார்டர் இன்ஷியூர் தொகைகளை யெல்லாம் சர்க்காரில் கொடுத்து விடுவார்கள். ஆனால் ரிஜிஸ்டர் கடிதங்கள் ஒவ்வொன்றிலும் ஆயிரம், ஐந்நூறு பெருமானமுள்ள நோட்டுகள் இருந்திருக்கும், அவைகளை அனுப்பியவர்கள்