பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விநோதத் திருட்டு 15

எல்லோரும் வாயில் விரலை வைத்துக்கொண்டு போக வேண்டியதுதான். அவர்கள் ஏமாறியதாவது தங்களுடைய புத்திக் குறைவினால் ஏற்பட்டது. ஆனால் அந்த வீட்டின் சொந்தக்காரரான நம்பெருமாள் செட்டியார்தான் அநியாயமாக மாட்டிக்கொண்டு விழிக்கிறார். அவர் தக்க பெரியமனிதர்; இப்படிப்பட்ட காரியம் நடக்கப் போகிறதென்பது அவருக்குத் தெரிந்தே இருக்காது. யாரோ பெரிய மனிதன் வந்து கேட்கி றானே என்று நம்பி அவர் வீட்டை விட்டுவிட்டார். அது இப்போது பெருத்த துன்பமாக வந்து விளைந்திருக்கிறது. அவர் போலீசாருடைய கையில் அகப்பட்டுத் தவித்துக் கொண்டி ருக்கிறார். கோபாலகிருஷ்ணப்பிள்ளைக்கு வீட்டை விட்டதும், அவன் இன்றைய காலையில் திறவுகோலை அனுப்பிவிட்டுப் போனதும் நிஜமென்று அவர் ருஜுப்படுத்தா விட்டால், பழி அவர் மேலேதான் வரும் போலிருக்கிறது” என்றார்.

அதைக் கேட்ட செட்டியார், ஐயோ பாவமே தெய்வமே - யென்று கிடந்த அந்த மனிதருடைய தலைக்கா கல் வந்தது! அடடா என்ன கஷ்டம் என்ன கஷ்டம் அவர் என்னுடைய பந்துவாயிற்றே. நான் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய்ப் பார்க்கிறேன். இதோ ஸ்டேஷன் வருகிறது. நாயுடுகாரு நமஸ்காரம், நான் போய்ப் பார்க்கிறேன்' என்று விசனத்தோடும் கவலையோடும் கூறிக்கொண்டு, டிராம் வண்டியை விட்டுக் கீழே இறங்கிப் போலீஸ் ஸ்டேஷனை நோக்கிச் சென்றார்.