பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 - வது அதிகாரம் காதற் பெருக்கும் - கலியானப் பேச்சும்

  • ளூ வர்களது சம்பாஷணையை நிறுத்தி, குதிரை வண் இடியில் சென்ற இளந்தோகையரான கோகிலாம்

பாள், செளந்தரவல்லி முதலியோரைத் தொடர்ந்து செல்வோம். அவர்கள் இருவரையும் நமது யெளவன 2 குமாஸ்தாவையும் தாங்கிச் சென்ற குதிரைவண்டி புரசைப்பாக்கத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. மிகுந்த அழகும் யெளவனமும் புத்திசாலித்தனமும் நிறைந்த அந்தப் பெண்மணிகளிற்கு அருகில் உட்கார்ந்திருந்ததினால் அந்த யெளவனப் புருஷன் அளவற்ற நாணமும் கிலேசமும் அடைந்து, வண்டிக்காரனிடத்தில் வார்த்தை சொல்லவும், வாயைத் திறக்கமாட்டாமல் தவித்துக் கொண்டிருந்தான்; அதுபோலவே அந்த மடந்தையரும் அந்த அதி சுந்தரபுருஷனுக்கு அருகில் உட்கார நேர்ந்ததைக் கருதி மிகுந்த சங்கடமும் லஜ்ஜையும் அடைந்தவர்களாய் ஒருவரிடத்தொருவர் பேசவும் வெட்கி மெளனம் சாதித்திருந்தனர்.

கடற்கரையில் அந்த அணங்குகள் இருவருக்கும் நேர்ந்த பெருத்த அபாயத்தையும், அவர்கள் தெய்வச் செயலால் தப்பிப் பிழைத்ததையும் நினைத்த போதெல்லாம் அந்த யெளவனப் புருஷனது உள்ளம் வருந்த, உடம்பு நடுங்கியதானாலும், அந்தச் சம்பவத்தைப் பற்றி அவன் ஒருவகையில் மிகுந்த சந்தோஷம் அடைந்தான். ஏனெனில், அந்த மடமயிலார் வசித்த பங்களாவை அடுத்திருந்த வீட்டில், அவனும் அவனது தாயும் சில மாதகாலமாக இருந்து வந்தனர் என்பது, முன்னரே சொல்லப்பட்டது அல்லவா? அவன் ஒவ்வொரு நாளும் அந்த பங்களாவின் வாசல் வழியாகப் போனபோது எல்லாம், அந்தப் பெண்பாலாரில் எவளேனும் ஒருத்தி உப்பரிக்கையிலிருந்த படியோ, அல்லது, உத்யானவனத்திலிருந்தபடியோ அவனது