பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதற் பெருக்கும் - கலியாணப் பேச்சும் 49

அப்போதைக்கப்போது உண்டாயிற்று. தான் ஏழை என்பது பற்றி அவள் தன்னைப் பொருட்படுத்தவில்லையோ என்ற சந்தேகமும் தோன்றியது.

அவ்வாறு அவன் தாமரை இலைத் தண்ணிர் போலத் தத்தளித்தவனாய்ச் செல்ல, நடுவில் வந்த அவனது வீட்டையும் கவனியாமல், அவன் அதற்கு அப்பாலும் அரைக்கால் மயில் தூரம் போய்; அவ்விடத்தில் தனது உணர்வைப் பெற்றுத் திரும்பி மறுபடியும் நடந்து இரவு சரியாக எட்டரை மணி சமயத்தில் தனது வீட்டின் வாசலண்டை வந்து சேர்ந்தான்.

அவன் எப்போதும் மாலை ஆறரை மணிக்குள் வீட்டிற்குத் திரும்பி வந்துவிடுவது வழக்கம். அன்றைய தினம் சில சாமான் கள் வாங்கிவரும் பொருட்டு, அவன் சைனாபஜார்த் தெரு விற்குப் போய்விட்டு வர ஏழரைமணி ஆகுமென்று அவன் தனது தாயினிடத்தில் காலையிலேயே சொல்லிவிட்டுப் போயிருந்தான். ஆகவே, அவனது தாய் மாலை ஏழரை மணிவரையில் பொறுத்துப் பார்த்தாள். மகன் வரவில்லை. அவளது மனத்தில் ஒருவித சஞ்சலம் உண்டாகிப் பெருகத் தொடங்கியது. சென்னையில் எங்கு பார்த்தாலும் மோட்டார் வண்டிகள் தாறுமாறாகவும் மனிதர் போவதைப் பொருட்படுத்தாமலும் குறுக்கு நெடுக்காகப் போவதும், அதனால் ஜனங்களுக்கு மரண அபாயம் நேருவதும் ஒவ்வொரு நாளும் நிகழும் சர்வசாதாரண சம்பவம் ஆதலால், தனது புதல்வன் வரத் தாமதமானது கற்பகவல்லியம்மாளுக்கு நிரம்பவும் துன்பகரமாக இருந்தது. அந்த அம்மாளுக்கு அவன் ஒரே புத்திரன் ஆகையாலும், அவனைத் தவிர, புருஷன் முதலிய வேறோர் உறவினரே இல்லாதவள் ஆகையாலும், அவள் தனது புதல்வனிடத்தில் தனது உயிரையே வைத்திருந்தவள் ஆதலாலும் அவளது சங்கடம் கடினத்திற்கு rணம் பெருகி மலைபோல விரிந்து கொண்டே போனது; கற்பகவல்லி அம்மாளுக்கு வீட்டிற்குள்ளேயே இருக்கை கொள்ளவில்லை. ஆகையால், தனது ஜோலிகள் எதையும் கவனிக்காமல் அந்த அம்மாள் கையில் விளக்கை எடுத்துக் கொண்டு வெளியில் வந்து வாசல் திண்ணையில் உட்கார்ந்தபடி வழிப்போக்கர்கள் எல்லோரையும் கவனித்துப் பார்த்துக் கொண்டே இருந்தாள். செ.கோ.1-5