பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

செளந்தர கோகிலம்



எட்டரை மணியாயிற்று. அந்தப் பாதை கிழக்கு மேற்காகச் செல்லும் பாதை ஆகையாலும், பட்டணம் கிழக்குப் பக்கத்தில் இருந்தமையாலும், அவள் கிழக்கு திக்கிலேயே தனது பார்வையைச் செலுத்தி உற்றுநோக்கிக் கொண்டிருந்த சமயத்தில், மேற்குத் திக்கிலிருந்து வந்த அவளது புத்திரனான யெளவன குமாஸ்தா, "என்ன அம்மா பார்க்கிறீர்கள்?’ என்று வினாவிய வண்ணம் வாசல்படியில் ஏற, அவனைக் கண்ட கற்பக வல்லியம்மாள் திடுக்கிட்டுத் திரும்பி, "என்ன தம்பி ஏன் இந்தப் பக்கத்திலிருந்து வருகிறாய்? பூந்தமல்லிக்கா போயிருந்தாய்?" என்றாள்.

கொஞ்ச நேரத்திற்குமுன் அவன் கிழக்குத் திக்கிலிருந்து அதே வழியாக மேற்கே போனபோது, கற்பகவல்லியம்மாள் வீட்டிற் குள் பூனை பாத்திரங்களை உருட்டிய ஒசையைக் கேட்டு, உள்ளே போய் சாதம், தயிர், பால் முதலிய வஸ்துக்களையெல் லாம் நன்றாக மூடி பாரம் வைத்துவிட்டுத் திரும்பி வந்தவளா தலால் அவன் போனதைக் கவனிக்கச் சந்தர்ப்பம் இல்லாமல் போய்விட்டது. ஆகவே, அவன் ஒருகால் தனது உத்தியோக சம்பந்தமாய்ப் பூந்தமல்லிக்குப் போய்விட்டுத் திரும்பி வருகிறானோ என்ற சந்தேகம் கற்பகவல்லியம்மாளது மனதில் எழவே, அவள் முன்னே குறிக்கப்பட்ட கேள்வியைக் கேட்டாள். தனது தாய்கேட்ட கேள்விக்கு உடனே மறுமொழி சொல்ல முடியாமல் சஞ்சலமடைந்த மைந்தன், “இல்லை இல்லை. பூந்தமல்லியில் எனக்கென்ன அலுவலிருக்கிறது? எல்லாவற்றை யும் சொல்லுகிறேன்; உள்ளே போவோம் வாருங்கள்” என்று பணிவாக விடைகூறிய வண்ணம் உள்ளே நுழைந்தான்.

ஒவ்வொரு நாளிலும், அவன் திரும்பி வருகையில், மிகுந்த உற்சாகமும் குதூகலமும் நிறைந்தவனாய் உள்ளே வந்து, தான் வழியில் கண்ட புதுமைகளையெல்லாம் அம்மாளிடத்தில் சொல்வது வழக்கம். அதற்கு மாறாக, அன்றைய தினம், அவன் வாட்டமடைந்தும், சோர்ந்தும், சஞ்சலமுற்று இருந்ததை ஒரு நெர்டியில் கற்பகவல்லி யம்மாள் கண்டு கொண்டாள். அவன் முதலில் உள்ளே நுழைய, அந்த அம்மாள், கையில் விளக்கை எடுத்துக் கொண்டு, வாசற்கதவை மூடித் தாளிட்டுக் கொண்டு