பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

செளந்தர கோகிலம்



வது பிசகு' என்று கூறியவண்ணம் கையை உதறிக் கொண்டு எழுந்துவிட்டான்.

அவன் ஒருகவளம்கூடச் சாப்பிடவில்லை யென்பதைக் கற்பகவல்லியம்மாள் உணர்ந்துகொண்டாலும், அதற்கு மேலும், அவனை வற்புறுத்துவது ஒழுங்கல்லவென்று நினைத்தவளாய், மிகுந்த அதிருப்தியோடு சென்று அவனுக்குரிய படுக்கையை விரித்து வைத்துவிட்டு வந்து, சமயலறையிலிருந்த ப்ாத்திரம் பண் உங்களையெல்லாம் ஒழுங்குபடுத்தலானாள்.

இலையை விட்டெழுந்த கண்ணபிரான் தனது கையை அலம்பிக்கொண்டபின் நேராகச் சென்று தனது சயனத்திற் படுத்துவிட்டான். அப்படிப் படுத்தவன் ஒரு நொடிப்பொழு தேனும் கண்களை மூடித் தூங்காமல் ஜூரநோய் கொண்டவன் போலப் புரண்டுபுரண்டு கிடந்தவண்ணமே அன்றைய இரவைக் கடத்தினான். கோகிலாம்பாளினது நினைவும் வடிவமுமே அவனது மனத்தைக் கொள்ளைகொண்டு அவனை நரக வேதனையில் ஆழ்த்திக் கொண்டிருந்தன. அவன் முக்கி முனகிப் பைத்தியக்காரன்போலப் பிதற்றியதைக் கண்டுகொண்ட கற்பகவல்லியம்மாள் மிகுந்த கவலையும், சஞ்சலமும் விசனமும் அடைந்தவளாய் அவனுக்கண்டையில் வந்து உட்கார்ந்து, உடம்பு என்ன செய்கிறதென்றும், வைத்தியனை அழைக்கலாமா வென்றும், இவை போன்ற எண்ணிறந்த கேள்விகளை வாய் ஒயாமல் கேட்டுக்கொண்டே இருந்தது அவனது வேதனையை ஒன்றிற்குப் பத்தாகப் பெருக்க அநுகூலப்பட்டதேயன்றி, அதனால் அவனது துன்பத்தில் கடுகளவும் குறையவில்லை. அவன் அந்தப் பெண்களுக்கு உதவி செய்வதில் தனது உடம்பை அதிகமாக அலட்டிக் கொண்டிருப்பதன்றி, அந்த அபாயத்தைக் கண்டு அவன் நிரம்பவும் பயந்து கொண்டிருக்கிறான் என்றும், அவன் செய்த அபாரச் செய்கையைக் கண்ட ஜனங்களது ஒமலும் அவனுக்கு ஏற்பட்டிருக்கிறது என்றும் தீர்மானித்துக் கொண்ட கற்பகவல்லியம்மாள் பொழுது விடிந்தவுடனே வைத்தியனையும் மந்திரவாதியையும் அழைத்து அவனுக்குத் தேவையான பரிகாரங்களைச் செய்ய வேண்டுமென்று எண்ணிக் கொண்டிருந்தான். .