பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதற் பெருக்கும் - கலியாணப் பேச்சும் 59

அந்த இரவு முழுதும் அவர்கள் இருவருக்கும் பரம சங்க டமான இரவாக முடிந்தது. அவனது மனம் விரக வேதனையின் எழுச்சியால் தளர்வடையாமல் கொந்தளித்த வண்ணமிருந்தது. ஆனாலும், அவனது அங்கங்கள் யாவும் முற்றிலும் சோர்வ டைந்து தத்தளித்துத் தள்ளாடின. அவனது கண்ணிமைகள் கட்டிலடங்காதனவாய்த் தாமாகவே மூடிக் கொண்டன. விடியற்காலை ஐந்து மணி சமயத்தில் அவன் சிறிதுநேரம் துயில்பவன்போலக் காணப்பட்டான் ஆனாலும், அவனது மனத்தில் பெருத்த நாடகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. கற்பகவல்லியம்மாளது நிலைமையோ நிரம்பவும் பரிதாபகரமாக இருந்தது. அவள் மிகுந்த புத்திர வாத்சல்யத்தைக் கொண்டவள் ஆதலால் அவனுக்கு ஏதோ தேக அசெளக்கியம் ஏற்பட்டு விட்டதே என்ற கவலையினாலும், அச்சத்தினாலும் கரைகடந்த சஞ்சலத்தில் ஆழ்ந்தவளாய், அவன் எந்த நேரத்தில் எதைக் கேட்பானோ அதைக் கொடுக்கத் தான் ஆயத்தமாக இருக்க வேண்டும் என்ற உறுதி கொண்டவளாய், மைந்தனது படுக் கையின் அண்டையில் உட்கார்ந்திருந்தாள். ஆனாலும், துயி லென்ற பெரும்பேய் தோன்றி அவளைப் பிடித்து வலுவாக அசைத்து உலுக்கத் தொடங்கியது. அவளது சிரம் அடிக்கடி கீழே வீழ்ந்து வீழ்ந்து நிமிர்ந்தது. அப்படிப்பட்ட மகா பயங்கரமான நிலைமையில் அவர்கள் இருக்க, மிகவும் நீண்டதாகத் தோன்றிய அந்தப் பொல்லாத இரவு கழிந்தது; சூரியன் உதயமாகித் தனது கிரணங்களைப் பரப்ப, அதற்குமேல் தான் தனது சயனத்தி லிருப்பது சந்தேகத்திற்கு இடமாகும் என்று நினைத்த கண்ண பிரான் உடனே படுக்கையை விட்டு எழுந்தான். அவனது சரீரம் ஒரு வருஷகாலம் ஜுரத்தினால் பீடிக்கப்பட்டுக் கிடந்தவனது சரீரம்போல மெலிந்து சோர்ந்து தள்ளாடியது. கண்கள் குழிவு பெற்றிருந்தன. முகம் இரத்தமின்றி வெளுத்துத் தோன்றியது. தனது தேக அசெளக்கியத்தின் உண்மைக் காரணம் இன்னது என் பதைத் தனது தாய் கண்டுகொள்வாளோ என்கிற அச்சமடைந்த கண்ணபிரான் அதற்குமுன் எப்போதும் எப்படி இருப்பானோ அப்படிப்பட்ட நன்னிலைமையில் இருப்பவன் போல நடித்துத் தனது வழக்கத்தின்படி காலைக் கடன்களை முடிக்கத் தொடங்கித் தட்டுத் தடுமாறி அங்குமிங்கும் சென்று கொண்டிருந்தான்.