பக்கம்:சௌந்தர கோகிலம்-1.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

செளந்தர கோகிலம்



கற்பகவல்லியம்மாள் அவனது கேவலமான பலஹீன நிலைமையைக் கண்டு பதறிப்போய், எழுந்து நடவாமல் படுக் கையிலேயே இருக்கவும், தான் வைத்தியனைத் தருவிப்பதாகவும் அவனை நோக்கிக் கூற, அவன் தனது தேகத்தில் எவ்வித நோயு மில்லை என்றும் வைத்தியனை அழைக்க வேண்டாம் என்றும் வழக்கப்படிதான் அன்றைய தினமும் தனது கச்சேரிக்குப் போக வேண்டும் என்றும் உறுதியாகக் கூறினான். அதைக்கேட்ட கற்பகவல்லியம்மாள் கரைகடந்த துயரமும், சஞ்சலமும் கவலையும் கொண்டவளாய், அவனை அன்றைய தினம் வெளியில் அனுப்பினால் அவனது தேகப்பிணி விபரீதமாகப் பெருகிவிடும் என்று எண்ணி, அவனை எப்படியாகிலும் அன்று முழுதும் வீட்டிலேயே வைத்திருக்க வேண்டுமென்ற உறுதி கொண்டவளாய், அவனுக்கு உடனே ஏதேனும் சுடச்சுட நல்ல ஆகாரம் தயாரித்துக் கொடுக்க வேண்டுமென்று நினைத்து, அவனைப் படுக்கையிலேயே இருக்கும்படி சொல்லிவிட்டு சமையலறைக்குள் போய் வென்னிர் காப்பி முதலியவைகளைத் தயாரித்துக் கொண்டிருந்தாள். தனது காலைக் கடன்களை முடித் துக்கொண்ட கண்ணபிரான் கூடத்தில் கிடந்த ஒரு சாய்மான நாற்காலியில் சாய்ந்து கால்களை அதன் கைப்பலகைகளில் நீட்டி விட்டவண்ணம் படுத்துக் கொண்டிருந்தான். அவனது விழிகள் விழித்தபடியே ஒரே நிலையில் நின்று வெறுவெளியை உற்று நோக்க, அவ்விடத்தில் அவனது அகக்கண்ணிற்கு மாத்திரம் புலப்பட்டவண்ணம் தாண்டவமாடிக் கொண்டிருந்த கோகி லாம்பாளென்னும் பேடன்னத்தின் மானnக வடிவத்தை நோக்கியபடியே அவன் அசைவற்று மெய்ம்மறந்து சோர்ந்து கிடந்தான். அடிக்கடி உண்டான நெடுமூச்சு அவனது தாயின் செவிகள் வரையில் எட்டி, அவளது மனதைத் தீயினும் கடிதாகக் கருக்கி வெதுப்பிக் கொண்டிருந்தது. அந்தச் சமயத்தில் அவர்களது வீட்டின் வாகற்கதவை யாரோ தடதடவென்று தட்டி இடித்த ஒசையுண்டாயிற்று.

மைந்தனும் தாயும் தங்களது சஞ்சலங்களிலேயே ஆழ்ந்து மெய்ம்மறந்து கிடந்தார்கள். ஆதலால் சிறிது நேரம் வரையில் அந்த ஒசை அவர்களது செவிக்குப் புலனாகாமல் இருந்தது. வெளியில் வந்திருந்த மனிதர் முன்னிலும் அதிகமாக ஓங்கி தட